‘ஆகாயம் முழுவதும் சிங்கள இரத்தம்’-இலங்கை கிரிக்கட் துவேச பாடலுக்கு கண்டனம்

இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் கெத்தாராம பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 5வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி பெரும் வெற்றியீட்டியது.
தொடரை 3-1 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இழந்த போதும் வெற்றியை அடுத்து இலங்கை அணி ஒரு பாடலை அதன் கிரிக்கட் கீதமாக அறிமுகப்படுத்தியது.
இலங்கை அணி வெற்றிபெறும் போதெல்லாம் இந்தப்பாடலைப்பாடவுள்ளதாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் ஆரம்பவீரர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஆரம்பத்தில் உரையாற்றியதை அடுத்து இந்தப்பாடலைப்பாடியிருந்தனர்.
இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
சிங்கள இரத்தம் ஆகாயம் முழுவதிலும் என அதில் ஒரு வரி இடம்பெற்றுள்ளது. இந்தவரி தொடர்பிலேயே கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இது போன்ற காரணங்களால் தான் இலங்கை கிரிக்கட் அணிக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதில்லை என மனித உரிமை சட்டத்தரணி மாதுரி தமிழ்மாறன் தனது டுவிட்டர் பதிவில் குறிபப்பிட்டுள்ளார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila