தேசம் காத்த சிறுவன் போல் நம் இனம் காக்க வாரீர்!

நெதர்லாந்தின் புவியியல் அமைப்பு கடல் மட்டம் உயர்வாகவும் தரைமட்டம் தாழ்வாகவும்  கொண்டது.

ஒரு நாள் சிறுவன் ஒருவன் அந்த அணை வழியாகச் செல்கிறான். அங்கே ஒரு துவாரத் தால் கடல் நீர் தரைக்குள் வருவதை அவ தானித்தான்.
உடனடியாக தன் கையினால் அந்தத் துவா ரத்தை அடைக்கின்றான். முடியவில்லை. நீர்க் கசிவு கட்டுப்படாதிருக்க, தன் முதுகை அணை யோடு ஒட்டிக் கொண்டு நீர்க்கசிவைத் தடுக் கின்றான்.

மகனைக் காணாத தந்தை அவனைத் தேடிச் செல்கிறார். கொட்டும் பனியில் இருள் சூழ்ந்த அந்த வேளையில் தன் மகன் கடல் அணையோடு தன் முதுகை வைத்தபடி கிடப் பதைக் கண்டார். நிலைமையை உணர்ந்து கொண்ட அவர் ஊருக்குள் சென்று விடயத் தைக் கூறுகிறார்.

ஊர் மக்கள் திரண்டு வந்து நீர்க்கசிவு ஏற் பட்ட அந்த அணையை அடைத்து விடுகின்றனர்.

அன்று அந்தச் சிறுவன் செய்த தியாகம் நெதர்லாந்து தேசத்தை காப்பாற்றியது. நமக்கு என்ன வென்று அந்தச் சிறுவன் நினைத் திருந்தால் அந்தத் தேசம் அழிந்திருக்கும்.

ஆக, எப்போதும் நமக்கென்ன என்ற சிந்த னைக்கு யாரும் இடம்கொடுக்கக்கூடாது. இந் தச் சிந்தனையே எங்களை வாழ வைக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இத் தகைய குறுகிய சிந்தனைகள் மற்றவர்களை யும் அழித்து எங்களையும் துன்பக் கடலில் வீழ்த்திவிடும்.

ஆகையால் எங்களுக்கு இருக்கக்கூடிய கடமையை, எங்களால் செய்யக்கூடிய கட மையை உரிய நேரத்தில் செய்வது புண்ணிய மான கருமம் என்பது நிதர்சனமான உண்மை.
அந்தவகையில், இன்றைய சூழ்நிலையில் தமிழினம் இன்னமும் இந்த மண்ணில் துன் பப்பட்டு வாழ்கிறது.

எனினும் அந்தத் துன்பத்தை அவருக் கென்றும் இவருக்கென்றும் பகிர்ந்து கொடுத்து விட்டு நாம் நிம்மதியாக இருப்போம் என்று யார் நினைத்தாலும் அது தர்மமாகாது.

ஆகையால் என்ன காரணத்தால் எங்கள் இனம் கஷ்டங்களையும் இழப்புகளையும் இன் னமும் சந்தித்து வருகிறதோ அந்தக் காரணங் களைக் கண்டறிந்து ஒரு சரியான பாதையை - வியூகத்தை அமைத்துக் கொள்வதுதான் ஒரே வழி.

எனவே நாளைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூரில் நடைபெற வுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பதன் மூலம் எங்களின் கோரிக்கை என்ன? நாங்கள் எத்தகைய அரசியல் தலைமையை விரும்புகிறோம் என் பதை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த வெளிப்படுத்தல் என்பது பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்கள் அணி திரள்வதன் மூலம் சாத்தியமாகும் என்பதால்,
தமிழினத்தின் நன்மை கருதி நாளைய தினம் தமிழ் மக்கள் அனைவரும்  ஒன்றுகூடுவது நம் இனத்துக்குச் செய்யும் பேருதவி யாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila