திருக்கேதீஸ்வரத்தில் விடுவிக்கப்பட்ட காணியில் பௌத்த குருமடம்!


மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டடங்கள் நேற்று விடுவிக்கப்பட்டன.
மன்னார் பிரதேச செயலாளர்  கனகாம்பிகை சிவசம்புவால், சைவமங்கையர் கழகத்தின் தலைவி யோகேஸ்வரா சிவாநந்தினியிடம் விடுவிப்புப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டடங்கள் நேற்று விடுவிக்கப்பட்டன. மன்னார் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்புவால், சைவமங்கையர் கழகத்தின் தலைவி யோகேஸ்வரா சிவாநந்தினியிடம் விடுவிப்புப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் சைவமங்கையர் கழகம், பெண்களின் வாழ்வியலை பாதுகாத்து முன்னேற்றும் நோக்கில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு பெண்குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது.

போர் காரணமாக கழகக் கட்டிடம் மருத்துவ சேவை நிலையமாக இயங்கி வந்தது. 1990 தொடக்கம் 2009 வரை இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. 2009 நாட்டில் சுமூகமான நிலை ஏற்பட்ட நிலையில் சைவமங்கையர் கழக தலைவியால் ஜனாதிபதி மற்றும் வடமாகான ஆளுநரிடம் கழகக் கட்டடத்தை இராணுவத்திரிடமிருந்து பெற்றுத் தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தார்.

ஜனாதிபதியின் தனியார் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக , குறித்த கட்டடங்கள் விடுவிக்கப்பட்டன.அவற்றை உத்தியோக பூர்வமாக பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு கழக தலைவியிடம் ஒப்படைத்தார்.

குறித்த கட்டடங்கள் அமையப் பெற்ற காணி ஐந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஒரு சிறிய பௌத்த குருமடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. விகாராதிபதிகளுடடன் கலந்துரையாடி குமடம் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila