மைத்திரி - மகிந்த தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி

மைத்திரி - மகிந்த தலைமையில் உருவாகும் புதிய கூட்டணிசிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 2 மணித்தியாலங்கள் நடந்த இந்தப் பேச்சுக்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, மகிந்த அமரவீர, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, ஏ.எச்.எம்.அதாவுல்லா, பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான, பேச்சுக்களை நடத்துவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான இந்தக் குழுவில், தயாசிறி ஜெயசேகர, திலங்க சுமதிபால, அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் அமைப்பாளராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila