வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவோரின் கவனத்திற்கு....!

இலங்கைக்கு கொண்டு வரக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்கா டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் தொகை 10,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் என சுங்க ஊடக பேச்சாளரும், பிரதி பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கு வருகை தரும் ஒருவர் 10,000 அமெரிக்க டொலருக்கு அதிகமாகவோ அல்லது ஏனைய வெளிநாட்டு நாணயங்களில் இந்த தொகைக்கு சமமான தொகையை கொண்டு வந்தால், அல்லது இலங்கையில் இருந்து 10,000 அமெரிக்க டொலருக்கு அதிகமாகவோ அல்லது ஏனைய வெளிநாட்டு நாணயங்களில் இந்த தொகைக்கு சமமான தொகையை கொண்டு செல்லுமாறு வேண்டுமானால், சுங்க திணைக்களத்திடம் அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில வாழும் எந்தவொரு நபரும் 20,000 ரூபா பணத்தை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல அல்லது நாட்டிற்கு கொண்டு வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila