எங்களுக்குள் நாங்கள் அடிபட்டாலும் மற்றவர்கள் எங்களை அடிப்பதற்கு விடக் கூடாது என்பதுதான் முக்கியமானது.
இந்த முக்கியம் வாய்ந்த உண்மைத் தத்து வத்தை பல ஊர்களில் பார்க்க முடியும்.
அதாவது அவர்கள் தங்களுக்குள் முரண் பட்டுக் கொள்வர். ஆனால் வெளியார் யாரும் முரண்பட்டால் மறுகணமே ஊர் திரண்டு முரண் பட்ட வெளியாருக்கு சாத்துப்படி கொடுக்கும்
இந்த இயல்பு நாடுகளிலும் இருக்க வேண் டும். இதற்கு இந்தியா நல்லதோர் உதாரணம். இந்திய தேசத்தில் ஏகப்பட்ட இனங்களும் மொழிகளும் மதங்களும் இருக்கின்றன.
தண்ணீருக்காக கர்நாடகாவும் தமிழ்நாடும் முரண்பட்டுக் கொள்ளும். அரசியல் விவகாரத் தில் அந்நாட்டுத் தேசியக் கட்சிகள் கண்டபாட் டில் விமர்சித்துக் கொள்ளும்.
ஆனால் பாகிஸ்தான் முண்டவெளிக்கிட் டால், இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் ஒரு கணப்பொழுதில் ஒன்றுசேர்ந்து நாங்கள் இந்தியர்கள் என்பதை நிருபித்துக் காட்டுவர்.
இதுபோல இலங்கையிலும் சிங்கள இனத் தில் இந்த ஒற்றுமை இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அதாவது சிங்கள அரசியல் கட்சிகள் தமக் குள் முரண்பட்டுக் கொள்ளும். ஆனால் தமிழர் கள் தம்மை எதிர்த்துக் கதைக்கிறார்கள் என்றவுடன் அவர்கள் ஒற்றுமையாகி விடுவர்.
இந்த ஒற்றுமை கடந்த பதினைந்து வருடங் களில் மிகப் பலமடைந்து வருவதை அவதானி க்க முடிகிறது.
இவ்வாறு ஒற்றுமைப்படுதல் என்பதைக் கடந்து; தமிழர்களின் குரலை அடக்குவதற் கும் அவர்களின் பிரச்சினைகள் வெளியில் தெரியாமல் இருப்பதற்குமாக, தமிழ் அரசியல் வாதிகளில் முக்கியமானவர்களைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களூடாக தங்களின் இலக்கை நிறைவேற்றிக் கொள் கின்றனர்.
இஃது சிங்கள இனத்தின் ஒரு பெரும் கெட் டித்தனம் எனலாம். இதை நாம் கூறும்போது அப்படியானால் தமிழர்களின் நிலைமை என்ன வாம் என்று நீங்கள் உங்களுக்குள் கேட்பது நம் செவிகளில் விழவே செய்கிறது.
இங்குதான் தமிழர்களுக்கு தக்க தலைமை இருந்தாலன்றி அவர்களை ஓரணியில் வைத் திருப்பது கடினம் என்பது தெரியவரும்.
தவிர, மற்றவர்களின் ஆசாடத்தில் மயங்கி தங்கள் இனத்தின் எதிர்காலத்தை இழந்து, பிற இனத்துக்கு அடிமையாகக்கூடிய தன்மை நம்மவர்களிடம் உண்டு. இதன்காரணமாக சிங்கள இனம் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எதனையும் தராமல் ஏமாற்றி வருகிறது.
இப்போது கூட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் எதிர்க்கட்சித் தலை வராக இருப்பதென்பது சிங்கள அரசியல்வாதி களின் இராஜதந்திரமேயன்றி கூட்டமைப்பின் கெட்டித்தனமன்று.
இன்று நினைத்தாலும் இரா.சம்பந்தரின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மகிந்த ராஜ பக்வால் பறிக்க முடியும்.
ஆனால் போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சு இருக்கும்வரைக்கும் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தர் இருப்பதே தமக்கு நன்மை என்ற அடிப்படையிலேயே மகிந்த ராஜபக் அதனை விட்டு வைத்திருக்கிறார்.
அவர்கள் அப்படிச் செய்ய, நாங்களோ முன் னாள் புலிப் போராளிகளின் குடும்பங்களை வதைப்பதற்காக முன்னாள் போராளியின் மனைவியிடம் துப்பாக்கி இருக்கிறது என்று முஸ்லிம் இனத்தவரைக் கொண்டு கூற வைக்கிறோம் எனும்போது தமிழருக்கு விடிவு கிடைக்குமா? என்பதை தமிழ் மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.