எங்களின் மண்ணில் - எங்களின் வாழ்வாதாரத்தில் கை வைத்த இராணுவம் !

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்திவந்த கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒரு வரின் கடையை குறித்த இடத்தில் நடத்த முடியாதென தெரிவித்து முள்ளிய வளை பொலிஸார் தடை விதித்துள்ளனர். 

 மேலும் தெரியவருவது, 


கேப்பாப்புலவில் படைத் தலைமையகம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால் அண் மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது நிலத்தில் மீள்குடியேறிய குடும்பம் ஒன்று சிறு பெட்டிக்கடையாக எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தியவாறு உள்ளனா்.

இந் நிலையில் படையினரின் முகாமிற்கு இது பாதுகாப்பு இல்லை எனவும் இக் கடை இப் பகுதியில் இருப்பதால் இராணுவத்துக்கு இது ஆபத்தாக அமையும் என தெரிவித்து முள்ளியவளை பொலிஸார் குறித்த கடையை மூடுமாறு எச் சரிக்கை விடுத்துள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளாா். 

இராணுவம் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இராணுவத் துக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே குறித்த கடையை நடத்த வேண்டாமென தாம் உத்தரவிடுவதாக முள்ளியவளை பொலிஸார் தமக்கு தெரிவித்ததாக கடையின் உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளாா். 

தமது காணிகளை அத்துமீறி பிடித்துவைத்துள்ள இராணுவம் அந்த நிலங்க ளில் உள்ள தமது வாழ்வாதாரங்களை, வருமானங்களை தம்மை பெற விடாது தாமே அனுபவித்துவரும் நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமக் குரிய நிலத்தில் கடன்களினூடாக சிறிய முதலீட்டை செய்து இந்த வியாபார நிலையத்தினை நடாத்திவரும் நிலையில் இராணுவத்தின் ஏவலில் பொலி ஸார் தமது நடவடிக்கைக்கு தடைபோட்டிருப்பது வேதனைக்குரிய விடய மென கடையின் உரிமையாளா் தெரிவித்துள்ளாா். 

இராணுவம் தமது நிலங்களை விடுவித்து விட்டதாக தெரிவித்துக்கொண்டு விடுவித்த எமது நிலங்களில் நாம் சுதந்திரமாக தொழில் செய்ய தடைவிதிப்ப தாக கடையின் உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளாா். 

இராணுவம் எமக்குரிய எமது நிலங்களை விட்டு வெளியேறினால் இந்த அவலநிலை எமக்கு இருக்காதென மேலும் இச் சம்பவம் தொடர்பில் ஊடக வியலாளர் ஒருவரை தொடர்பு கொண்ட முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவ ஊடக அதிகாரி குறித்த உத்தரவை தாம் வழங்க வில்லையென அவர்கள் அந்த இடத்தில் கடை நடத்துவதில் தமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லையெனத் தெரிவித்துள்ளாா். 

இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரை தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த எண்ணெய் கடை நடத்துவதற்கு அங்கு அவர்கள் அனு மதி எடுக்கவில்லை அவ்வாறு எண்ணெய் கடை நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படுவதும் இல்லை அனுமதி இல்லாத நிலையில் குறித்த கடை யினை மூடுமாறு தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா். 

பொலிஸார் இவ்வாறு கூறியிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத் தில் பல நூறுக்கணக்கான எரிபொருள் விற்பனை நிலையங்கள் இவ்வாறு பல வருடங்களாக இயங்கி வருகின்றதோடு அவ் வியாபார நடவடிக்கைகளுக்கு எவரும் இதுவரையில் தடை விதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila