வடக்கு முதலமைச்சருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாத சி.வி. விக்னேஸ்வரன், பொலிஸ் அதிகாரம் கோருவது தார்மீகமற்ற செயலாகும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமாயின் வடக்கில் இடம்பெறறும் குற்றச் செயல்களை இருவார காலப் பகுதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவேன் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனின் அவரால் கட்டுப்படுத்த கூடியதான குழுவொன்றை அங்கு செயற்படுகின்றமை தெளிவாகின்றது. அத்துடன் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கும் அவர் பொலிஸ் அதிகாரத்தினை கோருகின்றார். எனவே அவர் கோரும் பொலிஸ் அதிகாரத்தில் எத்தரப்பினரை கட்டுப்படுத்த உள்ளார் என்ற சந்தேகம் எமக்குள்ளது.
மேலும் முதலமைச்சருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு செய்யவேண்டிய பல வேலைத்திட்டங்கள் இருக்கின்றபோதும் அதனை செய்ய முடியாத முதலமைச்சர் மேலதிக அதிகாரம் கோருவது தார்மீகமற்ற செயலாகும் என்றார்.