தமிழ்ப் பற்று மிகுந்த முதியவர் ஒருவர் புலம்பெயர் உறவுகளுக்கு கடிதம் எழுதினால் எப்படியிருக்கும் என்று சிந்தித்தோம். அதன் வழி முதியவர் ஒருவரின் கடிதமாக இது அமைகின்றது.
வெளிநாடுகளில் இருந்து வடபுலத்துக்கு வருகின்ற எங்கள் புலம்பெயர் உறவுகளுக்கு அன்பு வணக்கம்.
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தாயகம் வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
ஊரையும் உறவையும் மறக்காமல் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்பதுபோல நீங்கள் இங்கு வந்திருப்பதால் மனம் நிறை வடைகிறது.
எனினும் ஒரு கவலை உங்களைப் போல் உங்கள் பிள்ளைகளும் தாயகத்து மண்ணை யும் உறவையும் நினைந்து வந்து போவார் களோ என்ற ஏக்கம்தான் அந்தக் கவலைக் குக் காரணம்.
உலக நாடுகள் முழுமையிலும் தமிழர்கள் வாழ்வது எமக்குப் பலமும் பெருமையுமாகும். ஒரு காலத்தில் இந்த உலகில் இருக்கக்கூடிய முதன்மை நாடுகளில் ஈழத்தமிழனின் வாரிசு கள்தான் அந்த நாடுகளின் ஆட்சிப் பீடங்களில் இருப்பர். இது சத்தியவாக்கு.
உள்நாட்டில் எங்கள் விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டாலும் என்றோ ஒருநாள் ஈழத் தமிழன் தன் உரிமைக்காக உலகம் முழுமை யிலும் இருந்து கொண்டு குரல் கொடுப்பான்.
அப்போது வல்லரசுகள் அதற்கு மதிப்புக் கொடுக்கும். இது நிச்சயம் நடக்கும். இதற் கான அத்தனை ஏற்பாடுகளையும் அந்த இறைவன் செய்து வருகிறான்.
அதற்கான அறிகுறிகளாக உலக நாடுக ளில் நம் உறவுகள் ஆட்சிப் பீடங்களிலும் அறி வியல்துறைகளிலும் பொருளாதார மையங் களிலும் கோலோச்சத் தலைப்பட்டுள்ளனர்.
இதுதான் எங்களுக்கு இறைவன் தர இருக்கின்ற கொடையின் அருட்குறி.
இருந்தும் நம் தமிழர்கள் எங்கு வாழ்ந் தாலும் அவர்கள் தமிழர்களாக வாழ வேண் டும். அது மட்டுமல்ல; தங்கள் பிள்ளைகளுக்கு தாய்மொழியாம் தமிழைக் கற்றுக் கொடுத்து தாயகத்தின் மீதான பற்றுறுதியை கட்டிக் காக்க வேண்டும்.
அப்போதுதான் யாம் மேற்கூறிய இறைவ னின் கொடை மிக எளிமையாக நடந்தேறும்.
ஆக, எமதருமை புலம்பெயர் உறவுகளே! நீங்கள் நினைத்தால்தான் ஈழத் தமிழினம் வாழ முடியும். தலைநிமிர முடியும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய அத்தனை பணி களையும் செய்கிறீர்கள்.
ஆனாலும் அந்தப் பணி உங்களோடு மட்டும் நின்று விடாமல், தலைமுறை தலைமுறை யாகத் தொடரட்டும்.
இதற்காக நீங்கள் அத்தனைபேரும் உங் கள் பிள்ளைகளுக்கு தமிழையும் தமிழ் உணர் வையும் கற்றுக் கொடுங்கள். அதுபோதும்.
வேறு என்ன மக்காள்; இப்ப வடபுலத்தில் வாகன விபத்து அதிகம். நீங்கள் வாழுகின்ற நாட்டு நடைமுறையில் இங்கு வாகனங்கள் ஓடுகின்றன என்று நினைத்து விடாதீர்கள்.
கவனம் மக்காள். பயணத்தின்போது வேகத் தைக் கட்டுப்படுத்தும்படி கூறுங்கள். அதற்கு மேலாக சாரதி நித்திரை கொண்டு விடுவார். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
வருகின்ற 16ஆம் திகதி நல்லூர்க் கந்தப் பெருமானின் கொடியேற்றம். ஒருக்கால் அவ னிட்ட போய் வாருங்கள். சுகமாக இருந்தால் மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.