தமிழினத்துக்கு மிகப்பெரும் சதிவேலைகளைச் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணமுள்ளன.
இவற்றில் இருந்து தமிழினம் பாதுகாக் கப்பட வேண்டுமாக இருந்தால், அதற்கான ஒரே வழி தமிழ் மக்கள் எதிலும் விழிப்பாக இருப்பதாகும்.
அதாவது அரசியல் புலத்தில் வெளிவரக் கூடிய அத்தனை செய்திகளினதும் உண்மைத் தன்மை தொடர்பில் தமிழ் மக்கள் மெய்ப் பொருளைக் கண்டறியக்கூடியவர்களாக இருப் பது இங்கு கட்டாயமானதாகும்.
ஏனெனில் தமிழினத்துக்காக நேர்மையா கப் பாடுபடக்கூடியவர்களை ஓரங்கட்டுவதற் கான நடவடிக்கைகள் திரைமறைவில் நடப்பது தெரிகிறது.
அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண சபை யின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது அதன் பதவிக்காலம் முடிவதற்குள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு மிகக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்கின்ற முயற்சிகள் நடப்பது தெரிகின்றது.
இந்த முயற்சிகளின் பின்னணியில் யார் யாரெல்லாம் செயற்படுகின்றார்கள் என்பது மக்கள் அறிந்த விடயமாயினும் வடக்கு மாகாண அரசின் இயங்குநிலை முடிவுறுவதற்கு இன் னும் சொற்ப காலமே இருக்கிறது என்ற நிலையில்,
மிகப்பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி; வடக் கின் முதலமைச்சர் மீது கடுமையான குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி, அவரை தமிழர் அரசி யலில் இருந்து வெளியேற்றுவதற்கான ஏற் பாடுகள் நடக்கிறது என்பது உறுதி.
இதனைத் திட்டமிட்டுச் செய்வதில் முஸ்லிம் இனத்தைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரே முதன் மைப்படுத்தப்படவுள்ளார் என்ற தகவல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
எதுஎவ்வாறாயினும் வடக்கு மாகாண சபையைக் குழப்பியவர்களுக்கு தக்க பதிலடி வழங்க தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண் டும்.
இதற்கு மேலாக, தமிழ் மக்களின் பிரச் சினைகளை எடுத்துரைப்பதிலும் இலங்கை அரசின் போக்கைக் கண்டிப்பதிலும் தமிழ் மக்களின் அரசியலில் நம்பிக்கைக்குரியவராக வும் இருக்கக்கூடிய முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் அவர்களுக்கு கடுமையான அழுத்தத்தை வடக்கு மாகாண சபையில் யார் செய்ய நினைத்தாலும் அதற்கான பதிலடி பல மாக இருக்க வேண்டும்.
இப்பதிலடி பலமாக இருக்கும்போதுதான் தமிழர்களுக்குத் துரோகம் செய்த அத்தனை பேரும் திருந்துவதற்கு அல்லது அரசியலில் இருந்து வெளியேறுவதற்கு வழிவகுக்கும்.
எனவே மண் மீட்புப் போராட்டத்தில் எத் தனையோ தியாகங்களைச் செய்த தமிழ் மக் கள், கயமைத்தனம் நிறைந்தவர்களின் கொடூ ரங்களிலிருந்து தங்களுக்கான அரசியலை பாதுகாக்க வேண்டும்.
இல்லையேல் எங்கள் தமிழினத்தின் எதிர் காலம் எங்கள் முன்னேயே விற்றுத் தீர்ந்து போகும்.
ஆகையால் வடக்கு மாகாண சபையில் இருந்து கொண்டு எம்மினத்துக்கு யார் கெடுதி செய்தாலும் அவர்களுக்குப் பதில் வழங்கு கின்ற பொறுப்பு தமிழ் மக்களுக்கு உரிய தாகையால் மக்கள் விழிப்பாக இருப்பது கட் டாயமானதாகும்.