தமிழர்களின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. கல்வித் தரம் தாழ்ந்து போயுள்ளது. இவைதான் என்றால் ஒவ்வொரு நாளும் வாள்வெட்டுக் கலாசாரம் தமிழர்களின் உறக் கத்தை சிதைக்கிறது.
இவ்வாறான நிலைமைகள் இருந்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தச் சலனமுமின்றி தம்பாட்டில் இருக்கின்றனர்.
வாள்வெட்டுச் சம்பவங்களின் பின்னணி என்ன? என்பது கூடத்தெரியாத அளவில் எங் கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் காலம் போகிறது.
இப்படியே நிலைமை இருந்தால், எங்கள் எதிர்காலம் அச்சம் நிறைந்ததாகவே அமையும்.
எனவே இது தொடர்பில் விழிப்படைய வேண் டியவர்கள் தமிழ் மக்கள். அவ்வாறான விழிப்பு ஏற்படும்போது எங்கள் அரசியல் தலைமை பற்றிய நினைப்பு முன்னெழும்.
அந்த முன்னெழுகை; பொருளாதாரம், கல்வி என்பவற்றின் வீழ்ச்சி என்பதற்கப்பால், எங்கள் அரசியல் தலைமையின் பலயீனம் எவ்வளவுதூரம் எங்களைப் பாதித்துள்ளதென் பதை உணர முடியும்.
இத்தகையதோர் உண்மை உணர்தலின் விளைவு புதிய அரசியல் தலைமை என்பதைக் கட்டியயழுப்புவதாக இருக்க வேண்டும்.
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அவர்கள் அமைச்சர் அனந்தியிடம் துப்பாக்கி இருக்கிறது என்று கூறுவதன் பின்னணியில் தமிழர்களுக்கு எதிரான சதித்திட்டம் தீட்டப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தச் சதிகார வேலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரால் வெளிவந்திருக் கிறதெனும்போது, தொடர்ந்தும் இதே தமிழ் அரசியல் தலைமை நீடிக்குமாக இருந்தால், எல்லாம் கந்தறுந்து காவடி எடுக்கின்ற படு மோசமான நிலைமைக்கே கொண்டு வந்து விடும்.
எனவே புதிய தமிழ் அரசியல் தலைமையை உருவாக்குவதுதான் தமிழர்களின் தலையாய பணியாக இருக்கும்.
இதைக் கூறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய அத்தனை பேரையும் ஓரங்கட்ட வேண்டும் என்பது பொருளல்ல.
மாறாக கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய விலைபோகாத, தமிழ் மக்களின் உரிமைக் காகக் குரல் கொடுக்கின்றவர்களையும் உள் வாங்கக்கூடியதாக புதிய அரசியல் தலை மையை உருவாக்குவதே பொருத்தமாகும்.
புதிய அரசியல் தலைமை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அன்றி தமிழரசுக் கட்சிக்கோ எதிரானதல்ல.
மாறாக தமிழ் மக்களின் நலன்களை, உரிமைகளை வென்றெடுப்பதற்கானது என்று புரிவதுதான் பொருத்தமானது.
ஆக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள்; தொண்டர்கள்; அந்தக் கட்சி யின் விசுவாசிகளாக இருக்கின்ற எங்கள் மூத்தவர்கள் என அனைவரையும் உள்ள டக்கி ஒரு புனிதமான தமிழ் அரசியல் தலை மையை உருவாக்குதல் என்பதே நாம் கூறிய மேற்போந்த கருத்தின் உட்பொருளாகும்.
இவ்வாறு புனிதமான தமிழ் அரசியல் தலைமையை உருவாக்கி அதன் செயலாக் கத்தை அரங்கேற்றும்போது, தமிழ் மக்களைப் பீடித்துள்ள அத்தனை தோசங்களும் நாசங் களும் எரிந்து போகும்.