சூதாட்டத்தில் துரியோதனன் வென்றதுதான் அவனுக்கு தோல்வியாயிற்று

மகாபாரதப் போர் மூழ்வதற்கு மூலகாரணம் சூதாட்டமே. 
சூதாட்டத்துக்கு வருமாறு தருமரை துரி யோதனன் அழைக்கிறான். வேண்டாம் என்று தருமர் மறுக்கவில்லை.

அவ்வாறு அவர் மறுக்காததன் காரணம் சூதாட்டத்தில் தருமருக்கும் சிறு விருப்பம் இருந் துள்ளதென்பதுதான்.

சூதாட்டம் பற்றியோ அதன் நுட்பம் பற்றியோ துரியோதனனுக்கு எதுவும் தெரியாது. அவ் வாறு சூதாட்டம் பற்றித் தெரியாத துரியோத னன் புத்திசாலித்தனமாக எனக்குப் பதில் என் மாமன் சகுனி சூதாடுவான் என அறிவிக்கின் றான்.

இப்போது தருமருக்கு நல்லதோர் சந்தர்ப்பம் கிடைக்கிறது. துரியோதனன் எங்ஙனம் சகுனியைத் தனக்குப் பதிலாகச் சூதாட விட் டானோ அதுபோல தருமர் தனக்குப் பதிலாக கிருஷ்ணபரமாத்மாவை சூதாட்டத்தில் நிறுத்து வதுதான் அந்தச் சந்தர்ப்பம்.
ஆனால் தருமர் அவ்வாறு செய்யவில்லை என்பது மட்டுமன்றி சூதாட்டம் பற்றி கிருஷ்ண பரமாத்மாவுக்குத் தெரிவிக்கவும் இல்லை.

இது எதற்கானது என்பதுதான் இங்கிருக் கக்கூடிய கேள்வி. 
தருமருக்குப் பதிலாக கிருஷ்ணபரமாத்மாவை சூதாட்டத்தில் இறக்கியிருந்தால், அவர் சகுனி யின் காய் உருட்டலைக் கட்டுப்படுத்தியிருப்பார். அவ்வாறு செய்தால், சூதாட்டத்தில் துரியோத னன் தோற்றிருப்பான். 

சூதாட்டத்தில் துரியோதனன் தோற்றிருந் தால், இயல்பாகவே மகாபாரதத்தின் ஆட்சி பாண்டவர் தரப்புக்கு வந்திருக்கும். அவ்வாறு வருவது தர்மமன்று.

ஆட்சியைப் பெறுவதற்கும் அறமுண்டு. சூதாட்டத்தில் வென்று ஆட்சியைத் தமதாக்கு வது பாண்டவர்களுக்கு அழகல்ல என்பதா லேயே கிருஷ்ணபரமாத்மாவைத் தனக்குப் பதி லாக நிறுத்த தருமர் விரும்பவில்லை என்று கருதலாம்.

தவிர, ஏலவே கூறியபடி சூதாட்ட விளையாட் டில் தருமருக்கு இருந்த ஆர்வமும் சூதாட்டத் தில் தானே நிற்பது என்ற முடிவுக்கு வழிவகுத் தது.
இங்குதான் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும். சூதாட்டத்தில் தருமர் வென்றிருந்தால் குருசேத்திரத்தில் போருக் கும் கீதோபதேசத்துக்கும் இடமின்றிப் போயி ருக்கும்.

ஆக, மகாபாரதப் போர் 18 நாட்கள் நடக்க வேண்டும். போரில் வீஷ்மர், துரோணர், கர் ணன் உள்ளிட்ட கெளரவர் சேனை அழிய வேண்டும். தர்மம் வெல்ல வேண்டும். இது தான் விதி. இந்த விதி நிறைவேறுவதாக இருந் தால், சூதாட்டத்தில் துரியோதனன் வென்றாக வேண்டும்.
அந்த வெற்றி நடக்கிறது. பாண்டவர் மனை யாள், சபையில் நின்று சபதம் செய்கிறாள். முறையே பாண்டவர்களும் சபதம் எடுக்கின்றனர்.
அவர்களின் வனவாசம் முடிய 18 நாள் போரில் துரியோதனன் தரப்பு மாண்டு போகிறது.
ஓ கடவுளே! சூதாட்டத்தில் வென்றதுதான் துரியோதனன் சேனை அழிவதற்கு காரண மாயிற்று.

ஆகவே, சூழ்ச்சி செய்து நல்லவர்களை வீழ்த்தலாம் என்று நினைப்பவர்களின் வெற்றி அவர்களுக்கான அழிவு என்பதைப் புரிதல் அவசியம்.
அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் தரப்பில் சூழ்ச்சி செய்து வெற்றி அடைபவர்களுக்கு துரியோதனனின் சூதாட்ட வெற்றி தக்க பாடம்.
இதை உணர்ந்து தர்மத்தின் வழியில் பயணிப்பது என்றும் நன்மை தருவதாகும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila