சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை உபசரித்த முல்லைத்தீவு பொலிஸார்!

srilanka-policeமுல்­லைத்­தீ­வுக் கட­லில் நேற்று அதி­காலை பெரும்­பான்­மை­யின மீன­வர்­கள், கடற்­தொ­ழில் அமைச்­சின் உத்­த­ர­வை­யும் மீறி தடை செய்­யப்­பட்ட முறை­யில் மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர். அவர்­க­ளைப் பிர­தேச மீன­வர்­கள் பிடித்து பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­தார்­கள். பொலி­ஸார் அவர்­க­ளுக்கு உண­வ­ளித்து, அறி­வுரை கூறி விடு­வித்­துள்­ளார்­கள். இவ்­வாறு உள்­ளூர் மீன­வர்­கள் குற்­றஞ்­சாட்­டி­னர்.
முல்­லைத்­தீ­வுக் கட­லில் வெளிச்­சம் பாய்ச்சி மீன்­பி­டித்­த­னர் என்று தெரி­வித்து பெரும்­பான்­மை­யின மீன­வர்­கள் மூவர் பிர­தேச மீன­வர்­க­ளால் பிடிக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் 3 பேரும் திரு­கோ­ண­ம­லை­யைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­க­ளின் மீன்­பிடி உப­க­ர­ணங்­க­ளும் கைப்­பற்­றப்பட்­டன.
மூவ­ரை­யும் முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைப்­ப­தற்­கா­கப் பிர­தேச மீன­வர்­கள் கொண்டு சென்­றுள்­ள­னர். அவர்­களை ஏற்­றுக்­கொள்­ளாத பொலி­ஸார் உங்­களை யார் பிடிக்­கக் கூறி­யது? யார் அதி­கா­ரம் கொடுத்­தது என்று அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­பட்­ட­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது.
3 மீன­வர்­க­ளுக்கு உண­வ­ளித்­த­து­டன், அவர்­கள் பிடித்த மீன்­கள் பழு­த­டை­யாது இருப்­ப­தற்கு ஐஸ் கட்­டி­கள் கொடுத்து அனுப்பி வைத்­த­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.
அதே­வேளை, முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நடை­பெ­றும் சட்­ட­வி­ரோத மீன்­பி­டி­க­ளைத் தடுக்­கக் கோரி முல்­லைத்­தீவு மாவட்ட நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­தின் முன்­பா­கத் தொடர் போராட்­டம் நடத்­தப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாக எதிர்­வ­ரும் 8ஆம் திகதி கலந்­து­ரை­யா­டல் ஒன்­றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila