வலம்புரி நாளிதழின் பிரதிகள் கடந்த முத லாம் திகதி யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாச லுக்கு முன்பாக வைத்து பன்னிரெண்டு பேர் கொண்ட முஸ்லிம் குழுவால் எரியூட்டப்பட்டது.
இது தொடர்பில் முகநூல் விமர்சனங்கள் பலவாறாக இருந்தன.
அதில் ஒரு சகோதரனின் கருத்து எனக்கு மிகுந்த விருப்பமாக இருந்தது.
சம்பந்தப்பட்டவரை எரியூட்டாமல் ஏன் வலம் புரி நாளிதழை எரிக்கிறீர்கள் என்று அந்த சகோதரன் கேட்டிருந்தார்.
என் மீது கொண்ட கோபத்தை வலம்புரி மீது காட்டாமல் வலம்புரியை காப்பாற்ற வேண்டும் என்று அந்த சகோதரன் நினைத்ததற்குள் இருக்கக்கூடிய தமிழ்ப்பற்று என்னை மகிழ் வடைய வைக்கிறது.
இவை ஒருபுறம் இருக்க, வலம்புரி நாளி தழை எரியூட்டிய முஸ்லிம் அன்பர்களைப் பார்த்தேன். அவர்கள் யார் யார் என்று இணை யத்தளமொன்று விலாவாரியாகப் பெயர் குறிப் பிட்டிருந்தது.
அவர்கள் இட்ட பதிவு சரியானது. இருந்தும் பன்னிருவர் விட்ட தவறை எம் முஸ்லிம் சகோ தரர்கள் மீது சுமத்த நாம் ஒருபோதும் விரும்ப வில்லை. அவ்வாறு செய்வது தர்மமுமன்று.
இதை நான் ஓர் அன்பரிடம் கூறியபோது இதுதான் தமிழரின் பலயீனம் என்றார்.
அவர் கூறியதன் பொருளை இதை எழுதும் போது உணர்ந்து கொண்டேன்.
ஆம், அன்று முதல்இன்றுவரை தமிழர்கள் எதையும் விட்டுக் கொடுக்கின்றனர். தங்க ளால் யார்க்கும் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று நினைக்கின்றனர்.
இது சேர் பொன்.இராமநாதன் முதல் இன்று வரை இருக்கக்கூடிய விடயம்.
வடக்கு மாகாண சபையில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் எழுந்து நின்று தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுக்குரிய வடக்கின் முதல மைச்சரை உடனடியாக வெளியேற்ற வேண் டும் என்று கூற,
அதனை அவைத் தலைவர் உள்ளிட்டவர் கள் வெறுமனே பார்த்திருக்கின்றாரெனில், எங்களின் நிலைமை என்ன என்பதை தமிழ் மக்கள் அறியாமல் இருக்க முடியாது.
வலம்புரி நாளிதழின் பிரதிகளை எரியூட்டிய பன்னிருவரில் சிலர் யாழ்ப்பாணத்தின் பிரபல மான வர்த்தக நிறுவனங்களை நடத்துகின்ற வர்கள்.
எனினும் வர்த்தக நிறுவனங்களும் அதில் கடமையாற்றும் பணியாளர்களும் பாதிப்படை ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக குறித்த வர்த்தக நிறுவனங்களின் பெயர் களைத் தவிர்த்துக் கொண்டோம். இதனை தமிழன் தவிர்ந்த வேறு எவரும் செய்திருக்க முடியாது.
இதை ஏன் செய்தோம் என்றால்; வலம்புரி நாளிதழை எரித்தவர்கள் இனவன்மத்தோடு, மதவன்மத்தோடு அநியாயத்துக்குத் துணை போகக்கூடாது என்பதற்காகவே.
முஸ்லிம் மக்களின் நிம்மதியான வாழ்வு என்பதற்குள் தமிழர்களின் உரிமைப் போராட் டம் கணிசமான வகிபங்கைக் கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்றி ணைந்தால், தமிழர்கள் தங்கள் பொருளாதா ரத்தை தங்களுக்குரியதாக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், நிலைமை என்னவாகும் என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.
அன்புக்குரிய முஸ்லிம் சகோதரர்களே! துரியோதனன் தவறிழைத்தால் அதனைத் தடுத்து அறத்தை எடுத்துரைப்பதுதான் துச் சாதனர்களின் கடமையாக இருக்க வேண்டும். மாறாக நெருப்பெடுத்து கொடுப்பது அறமன்று.