இரு இராணுவ வீரர்களுக்கு தீர்ப்பெழுதிய இளஞ்செழியன்.!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்ட விரோதமாக கைதுசெய்து அவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் இராணுவச் சிப்பாய் ஆகிய இருவ ருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் னர் (09.09.1998) யாழ்.குருநகர் பகு தியை சேர்ந்த அன்ரன் குணசேகரம் என்ற இளைஞர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு  இரண்டு நாட்க ளில் சடலமாக யாழ்.போதனா வைத் தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள் ளாா். 

இது தொடர்பாக 51 ஆவது முகாம் தளபதி முதலாம் எதிரியாகவும், யாழ்.512 ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி இரண்டாம் எதிரியாகவும், திருநெல் வேலி இராணுவ முகாம் இராணுவ அதிகாரி மூன்றாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் தொடுக்கப்பட்டிருந் தது.

இவ் வழக்கில் பல சாட்சியங்களது சாட்சியங்களையும், எதிரி தரப்பு சட்டத் தரணியினது வாதங்களை பரிசீலித்த மன்றானது இன்றைய தினம் இவ் வழக் கின் தீர்ப்புக்காக திகதியிட்டிருந்தது. 

இதன்படி இன்றைய தினம் காலை பதினொரு மணியளவில் நீதிபதி தனது தீர்ப்பினை திறந்த மன்றில் அறிவித்திருந்தார். அத்துடன் நீதிபதி தனது தீர்பில் இலங்கை உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகவும், சித்தி ரவதை தொடர்பான வழக்குகளிலும் வழங்கிய தீர்ப்புக்களையும், ஜ.நா.யுத்த குற்ற நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களையும் மேற்கோள்காட்டி தனது தண்டனை தீர்ப்பை வழங்கியிருந்தார். 

இவ் வழக்கின் முதலாம் எதிரியான 51 ஆவது படைத் தளபதி அச்சுவேலி முகாமை சேர்ந்தவர். அவர் குறித்த இளைஞனை கைது செய்தமை, தடுத்து வைத்தமை என்பனவற்றுடன் மாத்திரமே தொடர்புபட்டுள்ளதுடன் அவர் சித் திரவதை புரிந்தமை, கொலை செய்தமை என்பனவற்றுடன் தொடர்புடைய வா்.

என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாமையினால் அவர் வழக்கிலிரு ந்து விடுதலை செய்யப்பட்டார். மேலும் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் ஆதாரங்களூடாக பார்க்கின்ற போது இரண்டாம் எதிரியான இராணுவ கட் டளை தளபதி, மற்றும் திருநெல்வேலி இராணுவ முகாம் அதிகாரி ஆகியோ ருக்கு எதிரான குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபனமாகியுள்ளது. 

எனவே குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நிருபிக்கப்பட்ட 512 ஆம் படை பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் திருநெல்வேலி இராணுவ அதிகாரி ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் கழுத்தில் சுருக்கிட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை துக்கிலிட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டுமென திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு ஆணை பிறப்பித்துள்ளாா். 

குறித்த மரண தண்டனை தீர்ப்பானது வாசிக்கப்படுகையில் நீதிமன்றின் அனைத்து விளக்குகளும், அணைக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்ட பேனா முறித்து வீசப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila