சமுத்திரக்கனியின் சாட்டை என்ற திரைப் படம் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய படமாகும்.
அரச பாடசாலையயான்றை மையப்படுத்தி அதிபர், பிரதி அதிபர் ஆகியோருக்கிடையிலான முரண்பாடுகள் மாணவர்களிடையேயும் ஆசிரி யர்களிடையேயும் மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
இதை நாம் இங்கு கூறவந்தது, அந்த அரச பாடசாலையின் அதிபரை நினைக்கும் போதெல் லாம் எனக்கு சம்பந்தர் ஐயாதான் நினைவுக்கு வரும்.
இதை நாம் கூறும்போது அந்த அதிபர் போல சம்பந்தர் ஐயா சாந்தமான - அமைதியான - அதட்ட முடியாத ஒருவரா என்று யாரும் கேட்டு விடாதீர்கள்.
ஏனெனில் இன்றிருக்கக்கூடிய சம்பந்தர் ஐயா பற்றியே எமது ஒப்பிடுகை உள்ளது.
ஆம், பிரதி அதிபர் சொல்வதையயல்லாம் ஏற்றுக்கொண்டு அதற்கு மறுப்பு எதனையும் தெரிவிக்காத அதிபர் இருந்தால் அதன் பாதிப்பு மாணவர்களுக்கும் பாடசாலைச் சமூகத்துக் குமாகவே இருக்கும்.
இதுபோன்றுதான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நிலைமை உள்ளது.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை அதன் தலைவர் இரா.சம்பந்தர் மெளனமாகிவிட்டார். எதுபற்றியும் அவரால் கதைக்க முடியவில்லை.
முதுமை ஒரு காரணம் என்றால், அவர் கூட்டமைப்பின் தலைமையை பொருத்தமான ஒருவருக்கு வழங்க வேண்டும்.
இயலாது என்றிருந்தாலும் பதவி தேவை என்று நினைத்தால் அதனால் ஏற்படுகின்ற பாதிப்பு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கான தாகவே இருக்கும்.
இங்குதான் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் ஒரு சரியான முடிவுக்கு வரவேண்டும்.
இங்கு நாம் இரா.சம்பந்தர் அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற கோதாவில் கூற வில்லை.
ஏனெனில் இலங்கையின் இன்றைய எதிர்க் கட்சித் தலைவர் பதவி என்பது எதற்கும் பய னற்றது என்றாகிவிட்டது.
எனவே பயனற்ற ஒன்றைப் பற்றி நாம் பேசு வது அவ்வளவு நல்லதல்ல.
ஆனால் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தர் அவர்கள் மெளனம் கலைக்க வேண்டும்.
கூட்டமைப்புக்குள் நடக்கின்ற குழப்பங்கள் தொடர்பில் தனது கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சமஷ்டி தொடர் பில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்துவது கட்டாயமானதாகும்.
இதைவிடுத்து கதைக்க வேண்டிய விடயங் களிலும் மெளனம் காத்தால் பிரதி அதிபரிடம் தண்டனை பெற்ற சாட்டை படத்தின் அதிபரின் நிலைக்கு ஆட்பட வேண்டிவரும்.
ஆகையால் இரா.சம்பந்தர் அவர்கள் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதுடன் சமஷ்டி, அரசியலமைப்பு போன்ற விடயங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதையும் அறிவிக்க வேண்டும்.
இதைச் செய்யாதவிடத்து சம்பந்தர் ஐயா அறிவியுங்கள் என்றேனும் தமிழ் மக்கள் கேட்பது அவசியம்.