தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமை என்ன என்பது இப்போது மக்களுக்குத் தெட்டத் தெளிவாகிவிட்டது.
அதிலும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் இயலாதவர் என்ற முதுமைக்கு ஆளாகி விட்டார்.
தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜா, முதல்வர் விக் னேஸ்வரனைத் தவிர வேறு யாரையும் எதிர்க் கப் போவதில்லை.
நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனை கண்ட பாட்டில் விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளார்.
குருசிஷ்யன் என்ற உறவு இருப்பதாகக் கூறிக் கொண்டாலும் குருவை தபால்காரன் என்று கூறுமளவுக்கு முதலமைச்சரை கொச் சைப்படுத்துகின்ற அளவில் தமிழ் அரசியல் வந்துவிட்டது.
பரவாயில்லை இவையயல்லாம் எதிர்பார்க் கப்பட்டவைதான்.
தமிழர்களின் உரிமைசார் விடயத்தில் நம்ம வர்கள் ஒருபோதும் ஒற்றுமைப்போக்கைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.
இந்நிலையில் வடக்கு மாகாண அரசின் ஆயுட்காலம் முடிவுறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன என்ற நிலையில்,
சம்பந்தரும் விக்னேஸ்வரனும் ஒன்றுபட்டு மீண்டும் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டு வந்துவிடுவாரோ என்று அஞ்சிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் கள் சிலர் முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் கடுமையாக விமர்சித்து அவரைக் கூட்டமைப் பில் இருந்தும் முற்றாக வெளியேற்றுவதற் கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதை நாம் கூறும்போது கூட்டமைப்பு என்ற சொற்பதம் இப்போதும் அர்த்தமுள்ள நிலை யில் உள்ளதா என்றால்,
கூட்டமைப்பும் தன்னிலையில் இருந்து விடு பட்டு மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற பழைய நிலைக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன என்பதும் தெரி கிறது.
இதன் ஒரு கட்டமாகவே கூட்டமைப்பின் பங் காளிக் கட்சிகளைத் தூற்றுகின்ற செயற் பாடுகள் இடம்பெறுகின்றன.
இவை யாவும் சமஷ்டி என்பதற்குள்ளால் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலை மையில் ஒன்றிணைந்தால்; தனித்த தமிழரசுக் கட்சியா அல்லது பங்காளிக் கட்சிகள் சேர்ந்த அங்கமா கூட்டமைப்பு என்ற கேள்வி எழும்.
இந்தக் கேள்வியின் அடிப்படையில் பங் காளிக் கட்சிகள் சேர்ந்த அங்கம்தான் கூட்ட மைப்பு என்பதாக கூறிக்கொள்வதில் சட்ட நுணுக்கங்கள் ஏதேனும் இருக்குமா என் பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் அறிய வேண் டும்.
எதுஎவ்வாறாயினும் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்தும் பயந்து கொண்டிராமல் வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதுடன் கூட்டமைப்பை புதிதாகப் பிரதிஷ்டை செய்வது பற்றியும் சிந்திக்க வேண்டும்.