ஆட்கடத்தல் மற்றும் காணாமல்போகச் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஆயுதப்படையினர் மற்றும் பொலிஸாரை பணியிலிருந்து இடைநிறுத்துமாறு காணாமல் போனோருக்கான அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது. காணாமல்போனோருக்கான அலுவலகம் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கையிலேயே இந்த பரிந்துரை இடம்பெற்றுள்ளது.
|
கடத்தல் மற்றும் காணாமல்போகச்செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள ஆயுதபடையினர் மற்றும் பொலிஸாரை விசாரணைகள் முடிவடையும் பணியிலிருந்து இடைநிறுத்த வேண்டும் அவர்களை இடமாற்றம் செய்யக்கூடாது என காணாமல்போனோர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேபோன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்ககூடாது அல்லதுவேறு உயர் பதவிகளை வழங்ககூடாது எனவும் காணாமல்போனோர் அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
கடத்தல் மற்றும் காணாமல்போகச் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சில அதிகாரிகள் தொடந்தும் அதே உயர் பதவிகளில் நீடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ள காணாமல்போனோர் குறித்த அலுவலகம இதன் மூலம் அவர்கள் விசாரணைகளில் தாக்கம் செலுத்தும் நிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
விசாரணைகளிற்கு உதவும் தகவல்களை வழங்க முன்வந்த படையினர் துன்புறுத்தல்களை சந்தித்த சம்பவங்களும் உள்ளன என காணாமல்போனோர் அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கொன்றில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள படைத்தரப்பை சேர்ந்த அதிகாரியொருவர் இன்னமும் பணியிலிருந்து இடைநீக்கப்படவில்லை அவர் தொடர்ந்தும் அதிகாரியாக பணியாற்றுகின்றார் எனவும் காணாமல்போனவர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
|
குற்றம்சாட்டப்பட்ட படை அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பரிந்துரை!
Add Comments