சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் இன்ப அதிர்ச்சி

சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் இன்ப அதிர்ச்சிகளுத்துறை - தெபுவென நகரில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தி அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட காரணத்திற்காக தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சனத் குணவர்தன மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபரினால் நேற்று மாலை அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார்.
தம்மால் கைப்பற்றப்பட்ட மணல் ஏற்றிய லொறியை தெபுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதைத் தொடர்ந்து சர்ச்சை நிலை உருவாகியிருந்தது.
இதையடுத்து குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்காலிகமாக அவர் பணி நிறுத்தம் செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, சேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சனத் குணவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்ததுடன், ஜனாதிபதி அவருக்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார்.
அத்துடன், சேவையிலும் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, அந்த சம்பவத்திற்கு பிறகு, உதவியற்றவராக இருந்த சனத் குணவர்தனவின் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க பேஸ்புக் பயனர்கள் குழு சேர்ந்தது வங்கி கணக்கு ஒன்றை தொடக்கியது.
அந்த கணக்கில் சேகரிக்கப்பட்ட 3,25,000 ரூபாய் பணத்தை சனத் குணவர்தனவின் வீட்டிற்கு சென்று வழங்குவதற்கு பேஸ்புக் பயனாளர் நிமல் எதிரிசிங்க உட்பட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila