ரிசாத் பதியூதின்- அமீர் அலி தற்போது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ரிசாட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றம்
கைத்தொழில் விவகார அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஆளும் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளது.
கைத்தொழில் விவகார அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஆளும் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பதியூதீன் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இலங்கையின் இரண்டாவது பெரிய முஸ்லிம் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமீர் அலியும் ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்டுள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக் கொள்ள அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக கடமையாற்றி வந்த அமீர் அலிக்கு, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை அண்மையில் வழங்கப்பட்டது.
பாராளுமன்றில் எதிர்க்கட்சியினருக்கு அதிகம் இடையூறு ஏற்படுத்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் பதவியை ராஜினாமா செய்தே இந்த தேசியப் பட்டியல் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் நன்மையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானமிக்க தருணத்தில் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ளார்.
தம்முடன் 7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியை விட்டு விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதியூதினின் ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக ரிசாட் பதியூதீன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கிழக்கு மாகாணத்திற்கு மேற்கொண்டிருந்த விஜயங்களில் ரிசாட் பதியூதீன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசாத் பதியுதீன் மைத்திரிக்கு ஆதரவு- மாகாணசபை - 69 உள்ளுராட்சிசபை உறுப்பினர்களும் எதிரணியில்:
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற கட்சியின் முக்கிய கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றி வருகின்றார்.
சமீபத்தில் அரசாங்கத்தினால் அமைச்சர் பதவிவழங்கப்பட்ட அமீர்அலியும் எதிரணியில் இணைந்துகொண்டுள்ளார்.
இதேவேளை பல மாகாணசபை உறுப்பினர்களும், 69 உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் எதிரணியில் இணையவுள்ளதாக ரிசாத் தெரிவித்துள்ளார்.முஸ்லீம் சமூகத்தின் நலநன கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரிசாத் பதியூதின்- அமீர் அலி தற்போது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியூதின் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி உள்ளிட்ட குழுவினர் தற்போது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளின் கூட்டணியில் பங்கேற்கும் நோக்கில் அவர்கள் எதிர்கட்சி அலுவலகம் சென்றுள்ளதாகவும் தற்போது நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் அவர்கள் தங்களது அறிவிப்பை வெளியிடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளின் கூட்டணியில் பங்கேற்கும் நோக்கில் அவர்கள் எதிர்கட்சி அலுவலகம் சென்றுள்ளதாகவும் தற்போது நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் அவர்கள் தங்களது அறிவிப்பை வெளியிடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.