மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது:-

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தது-

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

மிக நீண்ட காலமாக அரசாங்கம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தக்க வைத்துக்கொண்டிருந்தது.

18ம் திருத்தச்சட்ட அமுலாக்கம் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்திக் கொண்டது.

அண்மையில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பயன்படுத்தப்பட்டது.

எனினும், நீண்ட நாட்களின் பின்னர் ஆளும் கட்சியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

தற்போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 148 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் அமீர் ஆகியோர் ஆளும்கட்சியை விட்டு விலகியதனைத் தொடர்ந்து, உறுப்பினர்களின் எண்ணிக்கை 150 லிருந்து 148 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் 15 ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கு பதிலாக திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் தம் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளது.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.
 
அமைச்சர்கள் ரிசாத்பதியுதீன் மற்றும் அமீர் அலியின் வெளியேற்றத்திற்கு பின்னர் இந்த நிலை உருவாகியுள்ளது.
 
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணி பக்கம் இணைந்துகொண்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கத்திற்கான ஆதரவு148 ஆக குறைந்துள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila