முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2014ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 7 தமிழர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பிலிருந்தும் வலுத்துள்ளன.