தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திசை திருப்பும் சுமந்திர னின் கருத்தை ஏற்கமுடியாது. எமது நிலைப்பாடு சமஷ்டியே, சுமந்திரனின் கருத்துக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும் போக்கையே காட்டுவ தாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன அறிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை காலியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட சும ந்திரன் எம்.பி “சமஷ்டி என்ற பெயர் பலகை எங்களுக்கு தேவையற்றது” எனக்கூறியிரு ந்தார்.
இந்நிலையில் இக் கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிர தித் தலைவருமான செல்வம் அடைக்கல நாதன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை திசை திருப்பும் சுமந்திரனின் கருத்துக்களை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எத்தகைய கருத்துக்களை கூறியிருந்தாலும் தமது நிலைபாடு சமஷ் டியே எனவும் புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங் கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இது குறித்து தமிழீழ புர ட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடுகையில்,
சுமந்திரனின் கருத்துக்கள் அரசாங்கத்து க்கு ஆதரவாக செயல்படும் போக்கையே காட்டுவதாக குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில் சுமந்திரன் எம்.பியின் கரு த்து தொடர்பில் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சமஷ்டி வேண்டாம் என சுமந்திரன் எம்.பி கூறுவா ராயின் பதவி ஒன்றை எதிர்பார்க்கிறார் என்றே அர்த்தம் எனக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.