முஸ்லிம் காங்கிரஸின் பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு- முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்கு 100 ஏக்கர் காணி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளனர்.
இது சம்பந்தமான இறுதி தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் நாளை அல்லது நாளை மறுதினம் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து பல நாட்களாக கூடி கலந்துரையாடியதாக பெரும்பாலான உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லி்ம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்கு 100 ஏக்கர் காணி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகித்து வரும் முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்கு புத்தளம், வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் 100 ஏ்ககர் காணியை வழங்குமாறு அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் காணி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி 100 ஏக்கர் காணியை சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது உறவினர்களுக்கு ஏற்கனவே பகிர்ந்தளித்திருந்ததுடன் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அதனை அரசாங்கம் மீண்டும் கையகப்படுத்தியது.
இந்த நிலையில், அந்த காணியை மீண்டும் அமைச்சருக்கே வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சர் இந்த காணியை பலவந்தமாக தனது உறவினர்களுக்கு பகிர்ந்தளித்த நிலையில், அரசாங்கம் அதனை கையகப்படுத்தியமை உட்பட சில காரணங்களுக்காக எதிர்ப்பை தெரிவித்து அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகியதாக கூறப்படுகிறது.
10 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இந்த காணி சம்பந்தப்பட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமைச்சருக்கு வழங்க காணி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கே இந்த காணி வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila