சர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்! முன்னாள் போராளிகள்

சர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்!  முன்னாள் போராளிகள்

காரைதீவு,எமக்கு புனர்வாழ்வளிப்பதாகக்கூறி விஷமேற்றி பாரிய துரோகத்தை செய்து எம்மை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது இலங்கை அரசாங்கம். நாம் தினம் தினம்செத்துக்கொண்டிருக்கின்றோம்.
எனவே சர்வதேசமும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் விரைந்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் போராளிகள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.
காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான பெரியதம்பி வசந்தகுமார் (வயது45) மற்றும் செல்வி சுப்பிரமணியம் தவமணி(வயது36) ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தமிழினப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் உயிரை துச்சமென மதித்துப் போராடிய எங்களை இலங்கை அரசு ஏமாற்றிவிட்டது. எமது சமுகமும் எங்களை முழுமையாக அங்கீகரிக்காதது வேதனையாகவுள்ளது.
ஆயிரம் சாவை எம் கண்முன்னே கண்டவர்கள் நாம். எமக்கு சாவு பெரிதல்ல. அதனைக் கண்டு பயப்படவுமில்லை. ஆனால் நாம் செத்தாலும் எம்மோடிணைந்தவர்களையாவது இந்த சர்வதேசமும் தமிழ்அரசியவ்லாதிகளும் காப்பாற்றட்டும்.
11ஆயிரம் போராளிகளும் அழிந்தால் தமிழினம் பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும். இதுவரை 107 பேர் இறந்துள்ளனர். நாமும் தினம்தினம் செத்துக்கொண்டிருக்கின்றோம்.
எனவே தமிழுலகம் இதுவிடயத்தில் துரிதமாகச் செயற்படாவிட்டால் எஞ்சியுள்ள போராளிகளும் அநியாயமாக இறக்கவேண்டியேற்படும் என்றனர்.
பெ.வசந்தகுமார் கருத்து வெளியிடுகையில்,
2009ல் வன்னியில் இடம்பெயர்ந்து குடும்பத்தோடு இராணுவத்திடம் சரணடைந்தோம். 2010 வரை பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டோம்.
பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டோம். பின்னர் வெலிக்கந்த சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டோம்.
அங்கு தினமும் 3நேரமும் கோழி இறைச்சி தரப்படும். அதனை அவர்கள் சாப்பிடமாட்டார்கள். நாம்தான் சாப்பிடுவோம்.சமைப்பதும் நாம்தான்.அங்கு ஒருவருட பயிற்சியின் பின்னர் 2011ல் சமுகமயப்படுத்தப்பட்டோம். அதாவது வீட்டிற்கு வந்தோம்.
நானும் எனது மனைவியும் இரு பெண்பிள்ளைகளும் பலத்த கஷ்டத்தின் மத்தியில் கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் கடந்த 4 மாத காலமாக எனது உடம்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறதை துல்லியமாக உணரமுடிகிறது.
       

வரவர கண் பார்வை குறைந்து வருகிறது. கையை உயர்த்த முடியாதுள்ளது. தலை சுற்றுகிறது.நெஞ்சு வலிக்கிறது. திடிரென எதுவுமே தெரியாமல் போகின்றது.
வைத்தியசாலைகளுக்கு சென்றால் நீரிழிவு அழுத்தம் அல்சர் என குளிசை தந்துவிட்டு உடலில் ஒரு குறைபாடுமில்லையெனச் சொல்கிறார்கள.
இரண்டு தினங்களாக படுத்தால் தலை சுற்றுகிறது. உடனே கண்விழிக்க வேண்டும்.இன்றேல் உலகம் சுற்றுவது போலுள்ளது. இரவு 12 நிமிடமே நித்திரை செய்கின்றோம்.உடம்பில் எதுவுமே இல்லாத நிலை தென்படுகிறது.
நான்க ராட்டியில் பிறவுண் பட்டி எடுத்தவன். ஒருவரை 27அடி தூரத்திற்கு தூக்கி வீசுவேன். ஆனால் இன்று ஒரு சிறுகுழந்தைகூட என்னை 27அடிக்கு தூக்கி வீசலாம் என்ற இயலாமை தென்படுகிறது.
இன்று என் மனைவி ஒரு குருக்களிடம் சென்று வெற்றிலை வைத்து சாஸ்திரம் பார்த்த வேளை அவர் எனது உடம்பில் விசம் கலந்திருக்கிறது. விச வியாதி உள்ளதாகக் ஆருடம் கூறியுள்ளார்.
இப்போதுதான் தெரிகிறது புனர்வாழ்வு முகாமில் எமக்கு விஷத்தையே ஏற்றியிருக்கிறார்கள். எமது உடம்பில் விஷம் கலந்திருப்பதனை உணர்கின்றோம்.இனி எம்மைச் சோதனை செய்பவர்கள் எமக்கு நம்பிக்கை உள்ளவர்களாகவிருக்க வேண்டும்.
இன்று ஓரளவு நடக்கலாம்.நாளை படுக்கும் நிலை வரலாம் அடுத்தது மரணம் தான்.எனவே எஞ்சியுள்ளவர்களையாவது காப்பாற்றுங்கள் என்றார்.
செல்வி.சு.தவமணி தெரிவிக்கையில்,
நான் 2009.05.11ல் ஓமந்தையில்வைத்து இராணுவத்திடம் சரணடைந்தேன். பின்பு எம்மை வவுனியா பூந்தோட்ட முகாமிலும் செட்டிகுள முகாமிலும் தடுத்து வைத்தார்கள்.
அங்கெல்லாம் எமக்கு கோழி இறைச்சியே உணவாகத்தருவார்கள். ஒருநாள் மீன்தரப்படும்.நாம் உணவு சமைப்போம். ஆனால் அவர்கள் இவ்வுணவை ஒருநாளும் சாப்பிட மாட்டார்கள்.அங்கு ஆன்மீக வகுப்புகளும் வைத்தனர்.
பின்பு எம்மை பூசா முகாமிற்கு கொண்டு சென்று 11மாதங்கள் தடுத்து வைத்தார்கள்.பின்பு வவுனியா பூந்தோட்ட முகாமிற்கு கொண்டு வந்தனர்.அங்கு நெருப்புக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுவதாகச் சொல்லி ஊசி போட்டார்கள்.
2012.01.22ம் திகதி எம்மை விடுதலை செய்தார்கள்.விடுதலையானாலும் மாதமொருமுறையாவது சி.ஜ.டி.யினர் எம்மை விசாரிப்பார்கள்.
சமூகத்தின்பார்வை தப்பாகவிருக்குமோ என அஞசுவதுண்டு.அரசதொழில் தருவதாகச் சொல்லி எம்மை ஏமாற்றினர்.கடந்த 7 மாதகாலமாக மாற்றத்தை உணர்கின்றேன்.
உடம்பில் தெம்பு இல்லாமல் இருக்கிறது. கண்பார்வை குறைகிறது. தலைசுற்றுகிறது. சிலவேளை தலை விறைக்கின்றது.வைத்தியசாலைக்குச்சென்றால் உடம்பில் ஒரு வருத்தமுமில்லை என்கின்றனர் .
ஆனால் உமக்குத்தெரிகிறது நாம் செத்துக்கொண்டிருக்கிறோம் என்று.இன்றையநிலையில் நான் சாவதற்காக பயப்படவில்லை. ஆனால் திருமணம் முடிக்காத நிலையில் மரணிக்கின்ற நிலையில் சமுகத்தின் பார்வை வேறுவிதமாகவிருக்கும்.
நாம் பாரிய போராட்டகளத்தில் இருந்தபோதும் ஒழுக்கம் இம்மியளவும் தவறவில்லை. அந்தளவு கட்டுப்பாடு இருந்தது. அப்படியிருந்து விட்டு இறுதியில் ஈனச்சொல்லைக்கேட்க விரும்பவில்லை.
எனவேதான் எம்போன்ற போராளிகளை சர்வதேசம் விரைந்து காப்பாற்றவேண்டும்.ஒருபொருளை கறையான் தினம்தினம் எப்படி அரிக்கின்றதோ அப்படி எமது உடம்பு தினம்தினம் செயலிழந்து அழிந்துகொண்ருப்பதை உணரக்கூடியதாயுள்ளது.
எமக்களிக்கப்பட்ட உணவு ஊசி என்பன விஷம் கலந்தது என்பது இப்போதுதான் தெரிகிறது. .யாரிடம் எமது அவலநிலையை சொல்லுவதென்றறியாமல் அலைகின்றோம்.
முதல்தடவையாக ஊடகத்திற்கு வாய் திறந்திருக்கின்றோம். வழிபிறக்க வேண்டும். எமக்கில்லாவிடினும் ஏனையோர் காப்பாற்றப்பட வேண்டும். என்றார்.


munnaal pooraalikal
Image result for முன்னாள் போராளிகள்Image result for முன்னாள் போராளிகள்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila