தனது குறும்படம் வாயிலாக தமிழர்கள் மனதை கொள்ளை கொண்ட கலைஞர் பாஸ்கி மன்மதன். பல விதமான பயனுள்ள கருத்துகளை தனது செல்பி அக்கம் பக்கம் தலைப்பில் வெளியாகும் குறும்படத்தின் மூலம் எடுத்துரைக்கிறார். ஐரோப்பா மண்ணில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழவிரும்பும் இடம் பிரித்தானியா. தற்போது பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக அறிவித்தது. எனினும் வெளியேறுவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றது... அக்கம் பக்கம் தொடர்பான செல்பி வீடியோக்களுக்கு இங்கே அழுத்தவும் சட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பாவில் இருக்கும் பிரித்தானிய மக்கள் பிரித்தானியாவிற்கும், பிரித்தானியாவில் இருக்கும் ஐரோப்பா மக்களும் அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி அனுப்பப்பட்டால் என்னவாகும் தமிழர்களின் நிலை என்பதை கூறியுள்ளார் மன்மதன் பாஸ்கி இந்த வார செல்பி அக்கம் பக்கம் தொடரில்.