தமிழீழத் தேசியக் கொடியும் இப்போதையை நிலையும் சில சிங்கள (ஆ) தமிழனின் செயற்பாடும்...!

எமது விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து தான் புலிக்கொடி உருவாகவில்லை, அது தமிழர்களின் பாரம்பரியமான கொடி புலிக்கொடி என்பதால் தான் தலைவரும் புலிக்கொடியை தெரிவு செய்து தேசியக்கொடியாக உருவாக்கம் பெற்றது, தமிழர்களை உலகிற்கு. அடையாளப்படுத்தியதும் இந்த புலிக்கொடிதான்.
இப்போது ஒரு சிலர் சொல்லுகின்றனர் கொடியை மாற்ற வேண்டுமாம், மாற்றுவதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் முஸ்லிம்களும் இருக்கின்றனராம், அவர்களுக்கென்று ஒரு அடையாளம் இல்லையாம் என்று இதில் சில கேள்விகளுக்கான பதிலை சொல்லித்தான் ஆக வேண்டும்

கொடி தமிழர்களுக்கான கொடி வட கிழக்கு தமிழர்களுக்கான கொடி. இதில் யாருமே மதங்களை இணைக்கவில்லை. தமிழர்களில் இந்து மதம் கிறிஸ்தவ மதம் முஸ்லிம் மதம் என்று உண்டு. இவர்கள் அனைவருமே தமிழ் பேசுபவர்கள் தான். இவர்களின் பூர்வீகமும் தமிழாகத்தான் இருக்கும்.
ஆனால் சில அரசியல் பேசுவதற்காக விதண்டாவாதம் செய்வதற்காகவும் புலிக்கொடியை மாற்ற வேண்டும் என்ற ஒரு கதை உலா வருவதை நாம் அறிவோம் .
எங்களுக்கான ஒரு தீர்வு வரும்போது புலிக்கொடியில் பிரச்சினை வருமென சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாத கதை. தமிழனின் கொடி புலிக்கொடி அதில் மாற்று கருத்தில்லை. மதங்களுக்காக புலிக்கொடியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றால் அவர்கள் வேறு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும். உலகத்தில் மொழிகளுக்குத்தான் முன்னுரிமை எந்த ஒரு நாடும் தங்கள் மக்களை மொழிகளால் தான் இணைத்துள்ளார்கள். மதங்களை அவர்கள் அரசியலுடன் இணைக்கவில்லை என்பது தான் உண்மை.
ஒரு அராபியன் அரபி மொழி போசுகின்றான் அவன் ஒரு முஸ்லிம்மாக இருப்பான் ஆனால் அவன் தனது நாடு என்று வரும்போது அராபியன் என்று தான் சொல்லுகின்றான். அதுபோல் தான் உலகத்திலுள்ள அமெரிக்கா என்றாலும் சரி ஐரோப்பிய நாடுகள் என்றாலும் தங்கள் மொழிகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றனர்.
தமிழ் பேசும் இந்துவும் தமிழ் பேசும் கிறிஸ்தவனும் நாளை கேட்பான் புலிக்கொடியில் எங்கள் மத அடையாளம் இல்லை அதில் மாற்றம் செய்யவேண்டும் அல்லது மாற்ற வேண்டும். என்று அதற்காக கொடியை மாற்றிக்கொண்டு இருக்க முடியுமா?
அன்று பாலகுமாரன் ஒரு உரையில் சொன்னார். தமிழ் பேசும் தமிழர்கள். அனைவரும் தமிழர்களே. அவர்கள் மதங்களை அரசியலுடனும் போராட்டத்துடனும் இணைக்க வேண்டாம் என்றும் தமிழ் பேசும் இந்துவும் ஒரு தமிழன் தான் தமிழ் பேசும் முஸ்லிமும் ஒரு தமிழன் தான் தமிழ் பேசும் கிறிஸ்தவனும் ஓரு தமிழன் தான் என்று ஆகவே எங்கள் மதங்களை நாம் எங்களுடனே வைத்திருப்போம்.
மதத்தில் அரசியலோ போராட்டமோ புகுந்தால் அது பாரிய விளைவுகளை கொண்டு வரும்.
யாரும் புலிக்கொடியை மாற்றவோ அல்லது அது சம்பந்தமாக பேசுவதற்கோ எத்தனிக்க வேண்டாம். முடிந்ததால் எங்கள் வரலாறுகளை உலகத்துக்கு உணர்த்துங்கள். காலம் காலமாக தமிழனின் கொடி புலிக்கொடியாக இருந்தது என்பதனை வரலாறுகள் ஊடாக சொல்லுங்கள் சேரன் சோழன் பாண்டியன் என்ற மன்னர்களின் கொடியும் அதுவே.
நாளை தமிழனில் ஒரு சாரார் புதிய மதத்தை உருவாக்கினால் அவரும் வந்து நிற்பார் கொடியை மாற்றுங்கள் நாங்கள் இப்போ வேறு ஒரு மதம் என்று இது நடக்காது என்று சொல்ல முடியாது நடக்கும். இப்போ யாழ்ப்பாணத்தில் பணத்துக்காகவும் சில பேர் புத்த மதம் மாறுகின்றனர். அவர்களும் தமிழர்களே, அவர்களும் தாங்கள் புத்தமதம் எங்கள் கலாச்சரம் வேறு அதனால் புலிக்கொடியை மாற்றுங்கள் என்றும் உரைக்கலாம்.
இப்போ ஒரு சில பேர் நினைப்பது நடக்காது. நடக்கவும் விடமாட்டோம். அப்படி யாரும் புலிக்கொடியை மாற்ற நினைத்தால் முதல் வேலையாக அவர்களை அழிப்பதற்கும் பின்னிற்கப் போவதில்லை என்பதனை மிகவும் ஆணித்தாரமாக உரைக்கின்றோம்.
புலிகளின் பெயரும் புகழும் சில புல்லுருவிகளுக்கு கசக்கலாம். அவர்கள் களமுனை அறியதவர்களாக இருக்கலாம். போராட்டத்தில் சிறு பங்களிப்பே செய்யாதவர்களாக இருக்கலாம்.
இவர்களில் கதைப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை போராட்டத்துக்கு அனுப்பினார்களா? அல்லது இவர்களேனும் போரடினார்களா என்பதனை சொல்லவேண்டும்.
இரத்தம் சிந்திய எம் தமிழர்களின் வாழ்வினில் ஒரு சில அரசியல் வாதிகளும் புல்லுருவிகளும் குளிர்காய நினைக்கவேண்டாம்.
 இது இறுதியான வார்த்தை என்பதனை நினைவில் வையுங்கள்.
நாங்கள் இதுவரைக்கும் யாருக்கும் அச்சுறுத்தலாகவோ அச்சுறுத்தல் செய்யவோ இல்லை அப்படியான செயல்களை செய்யவைக்க வேண்டாம்.
புலிக்கொடி தான் தமிழர்களின் கொடி, தமிழர்களின். கொடி தான் புலிக்கொடி.
போரில் பங்கு பற்றியவன், போரில் கடுமையான துன்பத்தை அனுபவித்தவன், இப்படியான கதைகளை சொல்லமாட்டான்.
இதில் ஒன்றை சொல்லுகின்றேன். உங்களுக்கு பெயரும் புகழும் வர வேண்டும் என்றால் போராடுங்கள். தமிழர்களுக்காக குரல் கொடுங்கள். எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் அடி பணியாதீர்கள். நிச்சயம் தமிழர்கள் ஒரு இடத்தை மனதில் ஒதுக்குவார்கள்.

யாளிமுகன்
யாழ்ப்பாணம்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila