ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள போதிலும், சிறுபான்மை கட்சிகள் குறிப்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகியன தேர்தல் தொடர்பாகத் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக் கூட்டம் கூடி கட்சியின் நிலைப்பாடு தொடர்பான முடிவை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அந்தக் கட்சியின் முடிவு என்ன என்பதை அறிவதற்காகப் பலதரப்பினரும் பெரும் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆயினும் முடிவு எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.
இதேபோன்று தம்pழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் யாழ்ப்பாணத்;தில் கூடி, ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய்ந்தனர்.
இந்தக் கூட்டத்தில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டிருக்கின்றது. வடமாகாண சபை குறித்து நீண்ட நேரம் விவாதம் நடத்தப்பட்டிருக்கின்றது. அதன் பின்பே ஜனாதிபதி தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் அறியப்பட்டிருக்கின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான மக்கள் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பின்போது பல்வேறு நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர்.
வழமையாக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலேயே இத்தகைய கூட்டம் வடைபெறுவதுண்டு. ஆயினும் தலைவர் சம்பந்தன் தற்போது நாட்டில் இல்லை. அவர் வைத்திய தேவைக்காக இந்தியாவுக்குச் சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை Nசுனாதிராஜாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் ஒரு முடிவு எட்டப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. இருப்பினும் இந்த முடிவு ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த கட்டமாக வடக்குகிழக்கு மாகாணங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ள முக்கிய கூட்டத்தில் மீண்டும் இதுகுறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும். அதன் பின்பே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் முக்கியஸ்தர்களாகக் களமிறங்கியுள்ள ஆளும் கட்சியின் வேட்பாளராகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிரணியின் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களுடைய கருத்துக்களை அறிவதற்காகக் கிராமந்தோறும் சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பொதுவாகவே நாட்டின் பிராதான பெரிய அரசியல் கட்சிகளாகக்கருதப்படுகின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளினதும் சார்பில் போட்டியிடுகின்ற இரண்டு வேட்பாளர்களே முக்கியத்துவம் பெற்றிருப்பார்கள். இவர்களை முன்னிலைப்படுத்தியே தேர்தல் நடவடிக்கைகளும், பிரசாரச் செயற்பாடுகளும் இடம்பெறுவதுண்டு.
இதற்கு விதிவிலக்காக கடந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், தனது முதலாவது பதவிக்காலத்தில் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா எதிரணியில் முக்கியத்துவம் பெற்றிருந்தார். விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இறுதி யுத்தத்தில் இராணுவ தளபதியாகப் பொறுப்பு வகித்து, இராணுவ நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்த சரத் பொன்சேகா, அரசாங்கத்தில் இருந்து விலகி, அரசியலில் புகுந்து, புதிய கட்சியொன்றைத் தொடங்கி அதன் மூலமாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களத்தில் குதித்திருந்தார்.
ஆனால் இம்முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும், அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேனா அரசாங்கத்தில் இருந்து விலகி எதிரணியில் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியாகிய சந்திரிகா பண்டராநாயக்க மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், எதிர்க்கட்சித் தலைவராகிய ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் ஆகியோரின் ஆதரவுடன் எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகத் தேர்தலில் குதித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் கட்சியின் முடிவை அறிய அனைவரும் ஆவல்
ஒருபோதும் இல்லாத வகையில் ஒரு சிக்கலான நிலைமையில் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டி நிலைமைகள் அமைந்திருக்கின்றன. ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது எதிரணியின் தேர்தல் நோக்கமாகும். நடைமுறையில் உள்ள ஆட்சி தொடர வேண்டும் என்பது அரச தரப்பின் நிலைப்பாடாகும்.
இந்த இரண்டு நிலைப்பாடுகளில் எதனைத் தெரிவு செய்ய வேண்டியது என்பது வாக்காளர்களின் முடிவுக்கு விடப்பட்டிருக்கின்றது. அதேபோன்று, இந்த இரண்டு நோக்கங்களில் எந்த நோக்கத்திற்கு ஆதரவளிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தலைமைகள் மீது பொறுப்பிக்கப்பட்டிருக்கின்றது.
சிறுபான்மை இன மக்களின் நலன்களைப் புறந்தள்ளியும், சில சந்தர்ப்பங்களில் அவற்றை நசுக்கும் விதத்திலும் செயற்பட்ட அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்து, ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு தடவைகளுக்கு மேலேயும் பதவி வகிக்கலாம் என்ற திருத்தத்தையும், சுதந்திரமாகச் செயற்படுவதற்கு வழிசமைக்கப்பட்டிருந்த முக்கியமான ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை இல்லாமல் செய்வதற்கான திருத்தத்தையும் உள்ளடக்கிய 18 ஆவது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் என்ன செய்யப் போகின்றது என்பது பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவும், அந்தக் கட்சியின் தலைவர் அமைச்சரவையின் அந்தஸ்து பெற்ற நீதியமைச்சராகவும் திகழும் வேளையில், முஸ்லிம்கள் மீது குறிப்பாக அளுத்கம பிரதேசத்தில் மோசமான வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. அந்தத் தாக்குதல்கள் அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்படவில்லை. அந்த வன்முறை தாக்குதலை நடத்தியவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பையும் அரசாங்கம் செய்யவில்லை.
நீதி அமைச்சராக இருந்த போதிலும் அளுத்கம வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உரிய நீதியை வழங்க அல்லது பெற்றுக் கொடுப்பதற்கு நீதி அமைச்சராகிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் முடியாமல் போயுள்ளது.
இந்தப் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து நின்று செயற்படுமா அல்லது எதிரணியின் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்குமா என்பதை அறிவதற்கு அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.
கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு கட்சி உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கண்டிப்பாகக் கட்டுப்பட்டுச் செயற்படுவார்கள் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுதியளித்திருக்கின்றார்கள். அதேநேரத்தில் கிழக்கில் உள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர், கட்சி தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பதில் தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றபோதிலும், சிறிலங்கா முஸ்லி;ம் கட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்தத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். அந்த முடிவின்படியே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மக்களின் முடிவுக்கு அமைவாக கட்சி தீர்மானம் மேற்கொள்ளாவிட்டால், கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக மக்கள் செயற்படுகின்ற மோசமான ஒரு நிலைமை இந்தத் தேர்தலில் ஏற்பட நேரிடும் என்பது குறித்தும் அவர் எச்சரிக்கை செய்திருக்கின்றார்.
கடைசியாக நடந்து முடிந்த ஊவா மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருந்தன. ஆயினும் அங்குள்ள மக்கள் அந்தத் தீர்மானத்தைக் கணக்கில் எடுக்காமல் தங்களுடைய தீர்;மானத்திற்கு அமைவாகவே வாக்களித்திருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அரசியல் விமர்சகர்கள், அத்தகைய ஒரு நிலைமை ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தையே இப்போது தீர்மானம் எடுப்பதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காட்டி வருகின்ற தாமதமான போக்கு காட்டியிருக்கின்றது என்றும் கூறுகின்றார்கள்.
கூட்டமைப்பு கவனத்திற் கொள்ள வேண்டியவை
யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களாகிவிட்ட போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ள உடனடி பிரச்சினைகள், எதிர்காலப் பிரச்சினைகள் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பவற்றிற்கு அரசாங்கத் தரப்பில் இருந்து உறுதியான நிலைப்பாட்டுக்குரிய சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்படவில்லை. மாறாக தமிழ் மக்களைப் புறந்தள்ளிச் செல்கின்ற விபரீதமான போக்கிற்கான அடையாளங்களே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இத்தகைய நிலைமையில் மாற்றுத் தரப்பாகத் தலையெடுத்துள்ள எதிரணியினருடைய நிலைப்பாடும், தமிழ் மக்களின் சாதாரண எதிர்பார்ப்புக்கள், பிரச்சினைகள் மற்றும் அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டதை வெளிபடுத்துவதாக அமையவில்லை. மாறாக ஆட்சியில் இருக்கின்ற தரப்பினர் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் எதிர்பார்ப்புக்களைக் கையாள்கின்ற போக்கு சரியானதே என்பதை ஏற்றுக்கொண்டதாகவே எதிரணியினருடைய கருத்துக்கள் வெளிப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தாமதப்படுத்தி வருவதையே காணக் கூடியதாக இருக்கின்றது.
தேசிய பிரச்சினையாகிய இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில், அரசாங்கத் தரப்பினர் விடாக்கண்டனாகவும், எதிரணியினர் கொடாக்கண்டனாகவும் இருக்கின்றார்களே என்று வருந்தத் தக்க வகையிலான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் இருப்பு, தமிழ்த்; தலைவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு என்பவற்றைப் பாதிக்கத்தக்க வகையில் இப்போது எடுக்கின்ற முடிவுகள் அமைந்துவிடக் கூடாது என்பதில் கூட்டமைப்பினர் மிகவும் கவனமாக இருப்பதாகவே தெரிகின்றது.
இவ்வாறு கவனமாகவும், அவதானமாகவும் கூட்டமைப்பின் தலைவர்கள் செயற்பட வேண்டும் என்பது அவர்களுடைய தலையாய பொறுப்பாகும்.
ஆனாலும், கூட்டமைப்பின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு தமிழ் மக்கள் இசைவடைந்திருக்க வேண்டும் என்பதும், எந்த முடிவாயினும்சரி, அந்த முடிவு குறித்து அவர்களுக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களைப் போக்குவதற்கு கூட்டமைப்பின் தலைமை என்ன விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என்பது தெரியவில்லை.
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியிருக்கின்றன. இந்தக் காலப்பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்தத் தேர்தல் தொடர்பான பிரசார கூட்டங்கள் எதனையும் நடத்துவார்களா, அவ்வாறாயின் எங்கெங்கு எத்தனை கூட்டங்கள் நடத்தப்படும் என்பது பற்றி அவர்கள் தீர்மானங்கள் எடுத்திருக்கின்றார்களா என்பது தெரியவில்லை.
இந்த நாட்டில் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ள இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் குறித்து சாதாரண தமிழ் மக்களுக்கு அவசியமான அரசியல் விளக்கத்தைப் போதிய அளவில் இந்தக் குறுகிய காலத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் வழங்க முடியுமா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.
இந்த நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களினாலும், ஜனநாயகத்தின் மீது பற்றுள்ளவர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை, மிகவும் வசதியாகவும், இலகுவாகவும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தி வருவதன் மூலம், இந்த அரசாங்கம், எதேச்சதிகாரமாக ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்கான அதிகாரப் பலத்தைக் கொண்டிருக்கின்றது என்பதை நிரூபித்திருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் யுத்த வெற்றியினால் கிடைத்துள்ள மட்டற்ற அரசியல் செல்வாக்கையும் மக்களின் அரசியல் ஆதரவையும் கொண்டு குடும்ப ஆட்சியை மேலோங்கச் செய்துள்ளதுடன். இராணுவ நிர்வாகம் இணைந்ததொரு நிர்வாகக் கட்டமைப்பையும் படிப்படியாக உருவாக்கி வருகின்றது.
இதனால் ஊழல்கள் மலிந்திருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்திருக்கின்றது. உள்ளுர் உற்பத்தி, தொழில்துறை விருத்தி என்பவற்றின் ஊடாக எட்டப்பட வேண்டிய தன்னிறைவு குன்றிச் செல்கின்றது. நாடு சுபிட்சமடைவதற்கு வலுவான பொருளாதாரமும், தன்னிறைவும் முக்கியமான அம்சங்களாகும்.
ஆனால் இவற்றை விருத்தி செய்வதற்குரிய ஆளுமை மிக்க நடவடிக்கைகள் நாட்டில் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. பொருளாதாரம் வளர்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருப்பதாக குறியீடுகள் நிறைந்த புள்ளிவபரங்களுடன் கூடிய அரசாங்க அறிக்கைகள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. ஆயினும் மக்களின் வாழ்க்கைச் செலவு விஷம்போல நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றது. தனிநபர் மற்றும் குடும்ப வருமானம் மேலோங்க முடியாத வகையில் பணவீக்கம் நடைமுறையில் காணப்படுகின்றது.
மோசமான ஒரு யுத்தத்தின் பின்னர், நாடு அபிவிருத்தியடைந்து வருகின்றது என்று அரசாங்கம் கூறுகின்ற போதிலும், நாட்டின் கடன் சுமைகளே அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரக் கொள்கையானது, சுபிட்சமான ஒரு எதிர்காலத்தை நோக்கிய திசையில் கொண்டு நடத்துவதற்கு உகந்ததா என்பது சந்தேகத்திற்குரியதாகியிருக்கின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில் நாட்டில் ஓர் ஆட்சி மாற்றம் அவசியம் என்பது உணரப்பட்டிருக்கின்ற போதிலும், யத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சிந்தனையும், அவர்களின் அரசியல் நிலைப்பாடும் இதனை உணரக் கூடிய நிலையில் இருக்கின்றதா என்பது சந்தேகமே.
ஏனெனில் அவர்கள் நாளாந்தம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும், யுத்தம் ஒன்று மூள்வதற்கு மூலகாரணமாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களின் மனங்களில் மேலோங்கியிருக்கின்றது. இத்தகைய ஒரு மனநிலையில் இந்த ஆட்சியை மாற்றி புதியதோர் ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், வரப்போகின்ற ஆட்சியில் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா, அதற்கான உத்தரவாதம் என்ன என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லாததோர் அரசியல் போக்கே காணப்படுகின்றது.
இத்தகைய நிலையில் தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதில் ஆர்வம் கொள்ளாமல் இருக்கவும் கூடும்.

எனவே தமிழ் மக்களின் மனப்போக்கையும், அவர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலை, தங்களுக்குள்ள பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி, எந்த வகையில் கணக்கில் எடுக்கப் போகின்றார்கள் என்பதையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சரியாக எடைபோட்டிருக்கின்றதா என்பது தெரியவில்லை.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் முக்கியமானவை. நாட்டின் ஏனைய பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் இருந்து தனித்துவமானவை.
எனவே, தமிழ் மக்களின் சிந்தனையோட்டத்திற்கு ஏற்ற வகையில் கூட்டமைப்பினர் தேர்தல் தொடர்பாக எடுக்கப் போகின்ற முடிவு அமையுமா, அந்த முடிவு அந்த மக்களை சரியான முறையில் வழிநடத்தி, சரியான முறையில் அவர்களை வாக்களிக்கச் செய்யுமா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.
எனவே, தமிழ்த்தேசிய கூட்டபைம்பு என்ன முடிவெடுக்கப் போகின்றது, அதனை எவ்வாறு பயனுள்ள வகையில் குறுகிய ஒரு காலப்பகுதிக்குள் செயற்படுத்தப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.