தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும்பான்மையாக கைப்பற்றியுள்ள நிலையில்.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரமும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசின் கையில் இருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகணசபை ஆளும் கட்சி கூட்டமைப்பில் இணைந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (2 உறுப்பினர்கள்), சிகல உருமைய (1உறுப்பினர்) ஏற்கனவே அரசில் இருந்து பிரிந்து எதிர்கட்சிக்கு சென்றதால் அரசின் சோரம் குறைவடைய ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகியதால். (7 உறுப்பினர்கள்) கிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சி 26 ஆகவும், அரசின் ஆளும் கட்சி 10 உறுப்பினர்களாகவும் ஆக மாறியுள்ளனர்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜ.தே.கட்சி இணைந்து கூட்டாச்சி அமைக்கும் சர்ந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, அதாவுல்லா, ஹிஸ்புல்லா ஆகியோர் மகிந்த அரசில் இருந்தும் இரண்டு மாகாணசபையின் அதிகாரமும் அரசின் கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.