காணாமற்போனவர்களை இறந்தவர்களாக கருதிப் பதிவு செய்வதற்குப் பதிலாக, இறந்தவர்கள் என்றே அதிகளவிலான பொதுமக்கள் பதிவு செய்துள்ளனர். அத்துடன் காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவும், இறந்தவர்கள் என்றே பதிவு செய்வதற்கு ஊக்கப்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வருடத்துக்கு மேலாக காணாமற் போனவர்களை இறந்தவர்களாகக் கருதி பதிவு செய்யும் சட்டமூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. குறித்த சட்டம் இரண்டு வருடங்களுக்கே நடை முறையில் இருக்கும் வகையில் கொண்டு வரப்பட்டாலும், இரண்டு தடவைகள் ஒவ்வொரு ஆண்டுக்கு அவை நீடிக்கப்பட்டன.
இந்த ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் குறித்த சட்டம் காலாவதியாகின்றது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் 199 பேரே, காணாமற் போனோரை இறந்தவர்களாக கருதிப் பதிவு செய்துள்ளனர். யாழ்.மாவட்டத்தில் 79 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 41 பேரும், மன்னார் மாவட்டத்தில் 21 பேரும், வவுனியா மாவட்டத்தில் 45 பேருமாக 199 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழு, காணாமற் போனவர்கள் என்று தெரிவித்து ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்தவர்களை, இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு ஊக்குவித்தது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் வரையில் 249 பேருக்கு அவ்வாறு ஊக்குவிப்புச் செய்து கடிதம் வழங்கியதாக, ஆணைக்குழுவின் தலைவர் குறிப் பிட்டிருந்தார்.
ஆனாலும், காணாமற் போனோரை இறந்தவர்களாகக் கருதிப் பதிவு செய்யும் நடவடிக்கையின் கீழ் அவர்கள் உள்வாங்கப்படவில்லை.
மாறாக, அவர்களை இறந்தவர்க ளாகவே பதிவு மேற்கொள்ளப்பட் டுள்ளது. இதன் மூலம் காணாமற் போனவர்கள் தொடர்பிலான எண் ணிக்கையை குறைக்க முடியும். அதற்காகவே காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை மேற் கொள் ளும் ஆணைக்குழு இந்த நடவடிக் கையை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.