ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தின் போது புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலை தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
அப்படியாயின் அதன் முன்னேற்றகரமான தன்மை என்ன நிலையில் இருக்கிறது என்று ஜே.வி.பி.யின் தலைவரும் எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க நேற்று சபையில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி பேசினார். அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சில தினங்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தாரையும் ஜனாதிபதி சந்தித்திருந்தார்.
அது மாத்திரமின்றி வித்தியாவின் படுகொலை தொடர்பில் விசேட நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
சாதாரண நீதிமன்றங்களில் இத்தகைய விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில் காலம் மட்டும் விரயமாகும் என்பதாலேயே ஜனாதிபதியும் விசேட நீதிமன்றம் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார்.
ஆகவே ஜனாதிபதியினால் கூறப்பட்ட விசேட நீதிமன்றம் என்பதன் முன்னேற்றத்தன்மை எந்த நிலையில் இருக்கின்றது. நீதியமைச்சர் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றார்.