பேரவையை 25ம் திகதி குழப்ப சுமந்திரன் அணி திட்டம்?

எதிர்வரும் 25ம் திகதி கூடவுள்ள வடமாகாணசபையினை குழப்பியடிக்க சுமந்திரன் அணி முழு அளவில் களமிறங்கவுள்ளது. அவ்வகையில் சுமந்திரன் அணியினை சேர்ந்தவர்கள் முதலமைச்சரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவருவது பற்றி பிரேரித்து விட்டு பேரவை அமர்வை புறக்கணித்து வெளியேற திட்டமிட்டுள்ளனர். எனினும் இம்முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி பெறுமென்பது தொடர்பில் தெரியாத போதும் தமக்கு ஆதரவு வழங்குமாறு இக்கும்பல் ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் பலரிடமும் கோரியிருப்பதுடன் தொடர்ந்தும் நச்சரித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
sumanthiran-grupeமுன்னதாக சுமந்திரன் ஆதரவு கும்பலை சேர்ந்தவர்கள் இவ்விடயம் தொடர்பில் கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்திருந்ததாகவும் எனினும் மாகாணசபை விடயத்தில் தான் ஆர்வம் காட்டவில்லையென வெட்டொன்று துண்டு இரண்டாக அவர் தெரிவித்ததாகவும் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சுமந்திரனோ தலைவர் அப்படித்தான் கூறுவரானெவும் நீங்கள் சோர்ந்து போகாது முயற்சிக்கவும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே எதிர்வரும் 25ம் திகதிய அமர்வினை குழப்பியடிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நடவடிக்கைகளில் முன்னணியினில் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ஆனோல்ட், சயந்தன், சுகிர்தன், சிவயோகன் மற்றும் பரஞ்சோதி தரப்பே உள்ளதாகவும் ஏனைய எவரும் பகிரங்கமாக முதலமைச்சரிற்கு எதிராக செயற்பட மறுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் பேரவை தலைவரும் வெளிநடப்பு செய்தால் பேரவை ஒத்தி வைக்கப்படவேண்டிவராலாமெனவும் மறுதரப்புக்கள் எச்சரித்துள்ளன.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila