31186 பேர் மீள் குடியேற முடியாத அவலநிலை! ஐ.நா ஆணையாளருக்கு தெரிவிப்பு

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 22 கிராமசேவகர் பிரிவுகளில் 9059 குடும்பங்களை சேர்ந்த 31186 பேர் சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலையில் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
மேற்கண்டவாறு வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றய தினம் யாழ்.சபா பதிப்பிள்ளை நலன்புரி முகாமிற்கு சென்றிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கிய அறிக்கையிலேயே மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, 1990ம் ஆண்டு 45 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களுடைய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிடிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பகுதி பகுதியாக சில கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்ட நிலையில் 22 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் மொத்தமாக மக்களுடை ய 5342 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்கியிருக்கின்றது.

இதனால் சொந்த நிலத்தில் மீள்குடியேற முடியாத நிலையில் 26 வருடங்களாக வலி,வடக்கு மக்கள் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்கள் மற்றும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.
இதனால் அந்த மக்களுடைய வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், மற்றும் சமூக ஓழுங்குகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila