போரின் இறுதிக் கட்டத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இலங்கை இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனிடம் சரணடைந்த வர்கள் பற்றிய பட்டியலை ஒப் படைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்த ரவு தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார்.
சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் 58 ஆவது டிவிசன் தலை மையகத்தில் இருக்கிறதா, இல் லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது.
ஆனால், நீதிமன்றம் ஊடாக இது தொடர்பாக விசாரணை இடம் பெற்று வரும் நிலையில், அந்த விசாரணைகளுக்கு இலங்கை இராணுவம் முழுமையான ஒத் துழைப்பை வழங்கும் .
காணாமற்போனவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் இராணுவம் முழுமையாக ஒத்துழைப்பைத் தரும்.
58 ஆவது டிவிசனிடம் சரணடைந்தவர்கள் தொடர் பாக நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வருவதால், அது குறித்த மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவது பொருத்த மாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


