யோஷிதவுக்கு பிணை மறுப்பு : நீதிமன்றம் அதிரடி (இரண்டாம் இணைப்பு)

yositha (3)நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும், தொடர்ந்தும் எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யோஷித ராஜபக்ஷ, ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டார். சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில், கடந்த 6ஆம் திகதி யோஷித உள்ளிட்ட ஐவரும் பொலிஸ் நிதி மோசடி தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யோஷித இன்று நீதிமன்றத்தில் ஆஜர் : பிணை கிடைக்குமா? நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர், இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்களுக்காக, கடந்த 6ஆம் திகதி யோஷித உள்ளிட்ட ஐவர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். அதனையடுத்து குறித்த ஐவரும் கடுவலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு சொந்தமான சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான பணம் எங்கிருந்து கிடைத்ததென கேள்வியெழுப்பப்பட்டு வருகின்ற நிலையில், மஹிந்த தரப்பால் இதுவரை அதற்கு எவ்வித காத்திரமான பதிலும் வழங்கப்படவில்லை. மேலும், யோஷிதவிற்கும் சீ.எஸ்.என் நிறுவனத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லையென்பது மஹிந்த தரப்பினரின் கருத்தாக உள்ளது.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila