நல்லாட்சி என்பது தமிழரைப் பொறுத்த மட்டில் வார்த்தையில் தான் மலர்ந்திருக்கிறதே தவிர, அரசியல் செயற்பாடுகளில் அல்ல.வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அரசியல் தலைவர்கள் மைத்திரி யின் நல்லாட்சி பற்றி என்னதான் புகழ்ந்தாலும்,அந்த நல்லாட்சியால் முழுமையாக நன்மை பெறுவது பெரும்பான்மையின சிங்கள மக்களே ஆவர்.இறையாட்சியை தவிர ஆட்சி வந்தாலும் தமிழர் நிலை ஒருபோதும் மாறாது என்பதைத் தமிழர் தரப்பு முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
உரிமை மறுக்கப்பட்ட இனம்
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஒரு சரீரத்தினுடைய வளர்ச்சியைப் போன்றது. ஒரு சரீரத்தின் எந்தப் பாகமாவது பாதிக்கப்பட்டால் அது முழுச் சரீரத்தையுமே பலவீனப்படுத்திவிடும். அதைப் போன்றே இந்த இலங்கைத் தேசத்திலும் காலம் காலமாய் ஒரு பாகமாக, தமிழர்களும் வடக்கு d கிழக்கு என அழைக்கப்படும் தங்கள் தாயக பூமியில் மிகப் பரவலாக வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்கள் தங்கள் தேசத்தில் உரிமை மறுக்கப்பட்ட ஓர் இனமாக இருப்பதால், இலங்கைத் தேசம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேசத் தைப் பொறுத்தவரைக்கும் ஒரு பலவீனமான தேசமாகக் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இனியும் கண்காணிக்கப்பட்டுத்தான் வரப் போகின்றது.
சரீரத்துக்குள் ஓடிய தமிழர்களின் குருதியானது தேசத்தில் ஓடியபோதெல்லாம், மூன்று தசாப் தங்களுக்கு மேல் இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த வொரு பெரும்பான்மை அரசும் தமிழருடைய உரிமைகளை சரிவரப்பகிர்ந்து இதயசுத்தியுடன் கொடுக்க ஒருபோதும் முன்வந்ததில்லை. தமிழர் தரப்பும் எப்படியாவது ஒரு தீர்வை பெற்றுவிட வேண்டுமென்று நினைத்தபோதெல்லாம் எந்தப் பயனும் கிட்டாது தோல்வியிலே துவண்டு போனதுதான் மிச்சம்.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் விதியயன்ற ஒன்று இறைவனால் நிச்ச யிக்கப்பட்டு இருப்பதுபோல், ஒவ்வொரு தேசத் துக்கும் இறைவனால் விதியயான்று நிச்சயமாக நிச்சயிக்கப்பட்டுத்தான் இருக்கின்றது. சில தேசங்கள் அவற்றின் உரிமைகளைப் போர் செய்து பெறுகின்றன. இன்னும் சில தேசங்கள் அவற்றின் விடுதலையை அகிம்சையால் பெறு கின்றன. அது அந்தந்தத் தேசங்களுக்கு இறைவ னால் எழுதப்பட்ட விதியாகும்.ஆனால், தமிழர் தேசம் அகிம்சை, ஆயுதமென இரு வழிகளிலும் போராடிப் பார்த்தது. இருந்தும் இந்த இரண்டு போராட்ட வழிகளும் தமிழருக்குத் தோல்வியையே பரிசாகக் கொடுத்தன. இனியும் கொடுக்கத்தான் போகின்றன. எனவே தமிழர் தேசத்துக்கும் இறைவனால் எழுதப்பட்ட விதி எதுவோ அதை இறைவன் ஒருவனே அறிவான்.
மண் மீட்புக்கான மகாபாரதம்
தமிழர்களின் அரசியல் பிரச்சினையை இறைவனே தனது சக்தி மூலம் தீர்த்து வைக்கக் கூடிய வன் என்பதைத் தமிழர்கள் எப்போதும் உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதர்களின் முயற்சி யானது ஒரு எல்லைக் குட்பட்டது என்பதை மண் மீட்புக்கான மகா பாரதம் மிக அழகாக உணர்த்துகின்றது.
தர்மத்தின் சாயலான பாண்டவர்கள், அதர் மிகளான கெளரவர்க ளால் வனத்துக்குள் துரத்தியடிக்கப்பட்ட போது இறைவனான ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால்தான் தங்கள் இராச் சியத்தை மீட்டெடுத்து சுதந்திரக் காற்றை சுவா சித்தார்கள் என்ற இறை வரலாற்றை தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
யோகர் சுவாமிகளின் பாடல்கள்
தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழர்களின் சிரசைச் சுற்றியிருக்கும் நவக்கிரகங்களாகும். அந்த நவக்கிரகங்களால் எந்தத் தீர்வையும் தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியாது. வேண்டுமானால் தமிழர்களுடைய ஓர் அரசியல் அடையாளமாய் சர்வதேசத்தின் கண்ணோட்டத்துக் காக வலம்வரலாமே ஒழிய வேறொன்றையும் அவைகளால் சாதித்துவிட முடியாது. இதுவே கடந்த காலங்கள் எமக்குக் கற்றுத்தந்த பாடமாகும்.
"சூரியன் வருவது யாராலே தூமதி தவழ்வது யாராலே
விண்மீன் மிளிர்வது யாராலே வெயி லெறிப்பது யாராலே
கண்ணினை காண்பது யாராலே காற்று மடிப்பது யாராலே
தண்ணீர் பெருகுதல் யாராலே தக்கோர் புகழ்வது யாராலே
பூமி சுழல்வது யாராலே பூக்கள் மலர்வது யாராலே
கால்கள் நடப்பது யாராலே கைகள் எடுப்பது யாராலே
எண்ணிப் பார்நீ யறிவாயோ எல்லாஞ் சிவன் செயல் குறியாயே
சொல்லு சுதந்திரம் பெறுவாயே சுவாமி வாக்கிது தெரிவாயே"
என்கிறார் நற்சிந்தனையில் ஈழத்துச் சித்தர் யோகர் சுவாமிகள். உண்மையில் இந்த உலகின் அனைத்து ஆசைகளும் இறைவனையே சார்ந்து இருக்கின்றபோது தமிழர்களுடைய தீர்வுத் திட் டமும் சுதந்திரமும் நிச்சயம் இறைவனையே சார்ந்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. யோகர் சுவாமிகளின் பாடலும் அதைத்தான் தமிழர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது.
- சாம் ரமேஸ்குமார்


