இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸாரை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு இன்று மாலை மன்னார் பெரியகமம் பொது நோக்கு மண்டப முன்றலில் இடம் பெற்றது.
அண்மைக்காலமாக மன்னார் பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் மன்னார் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் மன்னார் பெரியகமம், எமிழ்நகர், செல்வ நகர் போன்ற கிராமங்களில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவம் இடம் பெற்று வந்தது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ அவர்களின் வழி நடத்தலில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி பி.ஆர்.சரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரனைகளை மேற்கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தனர்.
குறித்த கொள்ளையர்களை கைது செய்து அச்சத்தில் இருந்த மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திய பொலிஸாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றினைந்து பொலிஸாரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை பெரியகமம் பொது நோக்க மண்டப முன்றலில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உற்பட கொள்ளையர்களை கைது செய்ய காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அ.விக்டர் சோசை, சர்வமதத்தலைவர்கள் ஆகியோர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொண்ணாடை பேர்த்தி கௌரவித்தனர்.
இதன் போது குறித்த கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பொலிஸாரை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.