சம்பள விவகாரத்தையே தீர்க்க முடியாதவர்கள் எவ்வாறு தேசிய பிரச்சினையை தீர்ப்பார்கள்?


தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளப்­பி­ரச்­சினை தொடர்­பாக பேசும் போது அதற்­கு பதி­ல­ளிப்­ப­தற்கு இந்த சபையின் ஆச­னங்­களில் யாரு­மில்லை. அவ்­வா­றி­ருக்­கையில் தமி­ழர்­களின் பிரச்­சினை எவ்­வாறு தீர்­க்கப்­ப­டு­மென்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தென தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன் தெரி­வித்தார்.

சம்­பளச் சபைகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் ஒழுங்கு விதியை அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான பிரே­ரணை மீதான விவாதம் நேற்று வியா­ழக்­கி­ழமை சபையில் இடம்­பெற்­றது. இதன்­போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், நம் தொழி­லா­ளர்­க­ளுக்­கு­ரிய சம்­ப­ளங்கள் வழங்­கப்ப­டாமை, சம்­பள வேறு­பா­டுகள் தொடர்­பாக இந்த உய­ரிய சபையில் எடுத்­துக்­காட்­டு­கின்றோம். அதில் காணப்­படும் பிரச்­சி­னை­களை முன்­வைக்­கின்றோம். அதற்குபதி­ல­ளிப்­ப­தற்கு யாரு­மில்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. ஆச­னங்­களில் பதி­ல­ளிப்­ப­தற்கு யாரும் இங்கு இல்லை. எம்மால் பேசப்­படும் விட­யங்கள் வெறும் பேச்­சோடு மட்டும் நிற்­காது செயற்­பாட்டு ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றே விரும்­பு­கின்றோம். ஆனால் சபையில் அதற்­கு­ரிய தீர்­வு­களைப் பெறு­வ­தற்கு யாரு­மில்லை.

அவ்­வா­றி­ருக்­கையில் தமி­ழர்­களின் பிரச்­சினை எவ்­வாறு தீர்க்­கப்­படும் என்ற அச்சம் எழு­கின்­றது. இதற்கு இது நல்ல உதா­ர­ண­மா­கின்­றது என்றார்.இதன்போது தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர அமைச்சர் மதியபோசனத்திற்கு சென்றிருப்பதால் அவரின் கவனத்திற்கு தான் கொண்டு வருவதாகக் கூறினார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila