மௌனத்தை விட அதிகாரத்தை பலப்படுத்த வேறெதுவும் இல்லை. என்று தமிழ்நாடு சினிமா இயக்குநர் இ.மணிமேகலை சொன்னார். இப்பொழுது இது ஜங்கரநேசனுக்குப் பொருந்தும்.
வடமாகாண சபை அமர்வில் விவசாய அமைச்சர் ஜங்கரநேசனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் விவசாய அமைச்சால் செய்யப்பட்ட வேலைத் திட்டங்கள் சம்பந்தமானது. அதாவது கடந்த இரு ஆண்டுகளில் விவசாய அமைச்சுக்கு ஒதுக்கிய நிதியை முழுமையாக மக்களுக்காக செலவு செய்துவிட்டார் என்பதனால் அந்த வேலைத்திட்டங்களில் குறை கண்டுள்ளனர். இந்தக் குறை கண்டுபிடிப்புக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதாவது முக்கியமான காரணமாக முதலமைச்சருக்கு சார்பாக ஜங்கரநேசன் இயங்கி வருகின்றமை ஆகும். முதலமைச்சரை இல்லாமல் செய்து அந்தப் பதவியை எடுத்துவிட வேண்டும் என்று வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கங்கணம் கட்டி நிற்கிறார். வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் எப்படியாவது விவசாய அமைச்சர் பதவியை தான் எடுத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார். இவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நம்பிக்கை அளித்துள்ளார்.
வடமாகாண அமர்வில் ஏனைய அமைச்சர்களுக்கு ஒதுக்கிய நிதி என்னானது என்ற கணக்கு வழக்கு இதுவரை இல்லை. இதனை அமர்வில் முதலில் கேட்டிருக்க வேண்டும். அதனை பாராமுகமாக விட்டு விட்டு மக்களுக்காக செலவு செய்த நிதியை ஏன் செலவு செய்தது என்ற மாதிரி ஜங்கரநேசனைக் கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு புளொட்டினை உள்ளே எடுத்ததில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்ததின் விளைவு இப்பொழுது லிங்கநாதனால் தெரிகிறது.
ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் உருப்படாது என்று சொல்வார்கள். அதே போல் புளொட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புகுந்துள்ளது.
முதலமைச்சரிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஆதரவு வழங்காத குற்றச்சாட்டுக்களின் கீழ் விவசாய அமைச்சரிற்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்களினை எழுப்பியுள்ள வடமாகாண சபையின் சுமந்திரன் அணி இது தொடர்பில் முதலமைச்சரினை விசாரணை செய்யவும் கோரியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் உத்தேச அரசியல் யாப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாதென முதலமைச்சரினை கோரும் கடிதமொன்றை தயாரிக்க வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தலைமையில் கூடிய போது அதில் பங்கெடுக்க விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மறுதலித்திருந்தார்.
அதே போன்று மீன்பிடி அமைச்சரும் தனது போலியான கையெழுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே விவசாய அமைச்சரை பழிவாங்கும் நோக்கில் அவரிற்கு எதிராக சிவஞானம் சயந்தன், ஆனோல்ட் சுகிர்தன் மற்றும் அஸ்மின் உள்ளிட்டவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் கோரப்பட்டுள்ளது. மக்களே வேதனைப்படும் வகையினில் மாகாண சபையின் போக்கு அமைந்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பிறந்த நாளான 9 ஆம் திகதி ஐங்கரநேசனை அமைச்சிலிருந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து நீக்க முற்பட்டிருக்கிறது தமிழரசுக்கட்சி, வடக்கு மாகாணசபையின் 45ஆவது அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் இரண்டு விடயங்கள் நீங்கலாக ஏனைய விடயங்கள் அனைத்தும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை குற்றம் சாட்டும் வகையிலேயே அமைந்திருந்தன.
மரம் நடுகை மாதத்தில் (கார்த்திகை) மரம் நட்டமை தொடக்கம் வைரமுத்துவை உழவர் விழாவுக்காக அழைத்தமை வரையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கி தீர்மானத்தை முன்மொழிந்தார் வன்னி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன். இதனை அடுத்து மாகாணசபை உறுப்பினர்கள் ஆனோல்ட், சயந்தன், சுகிர்தன், இந்திரராஜா மற்றும் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
பொதுவான விடயத்தினை முன்வைப்பதாகத் தொடங்கிய விவாதம் எந்தக் கட்சியையும் சாராத ஐங்கரநேசனை மட்டும் நோக்கியதாக அமைந்த நிலையில் எதிர்ப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் குறித்த அமைச்சுத் தொடர்பில் முதலமைச்சர் விசாரிக்க வேண்டும் என்ற பிரேரணை எதிர்ப்புக்கள் எதுவும் அற்ற நிலையில் நிறைவேறியிருக்கிறது.
விக்கினேஸ்வரனுக்கு எதிராக கையெழுத்திடாமை! தலைநகர் கொழும்பில் சுமந்திரன் பொப்பிமலர் அணிந்த போது யாழ் கிட்டு பூங்காவில் கார்த்திகைப் பூ அணிந்து மரநடுகை மாதம் கடைப்பிடித்தமை! யால் சுமந்திரன் அணி ஜங்கரநேசன் மீது கடுப்hகி இருந்தனர்.
தமிழரசுக் கட்சி ஐங்கரநேசனுக்கு எதிராக அமர்வை திருப்பியிருந்ததற்கான காரணம் என்ன? என்று பார்த்தால்
ஆரம்பத்திலிருந்தே சுமந்திரனின் அவுஸ்ரேலிய விஜயத்திலிருந்து சூடுபிடித்திருந்த முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பல வழிகளில் முயற்சித்தும் இறுதியில் முதலமைச்சர் தன்நிலையை திடமாக உறுதிப்படுத்திய நிலையில் முதலமைச்சருக்கு மிக நெருக்கமாக செயற்பட்டு வருவதாக அறியப்பட்ட ஐங்கரநேசன் மீது கை வைப்பதன் ஊடாக முதலமைச்சரை தனிமைப்படுத்தும் ராஜதந்திரம் கையாளப்பட்டிருக்கின்றது.
முதலமைச்சர் மீதான நகர்வுகள் ஆரம்பமானதிலிருந்து முதலமைச்சரை விட வெளியில் இருந்த முக்கியமான சில உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கின்றனர் இந்த நிலைக்கு வலுச் சேர்க்கும் வகையில் உதயமான தமிழ் மக்கள் பேரவை மேலும் முதலமைச்சரை வலுப்படுத்தும் ஒரு ராஜதந்திரமாக அவதானிக்கப்பட்டு வந்திருந்தது.
இந்த நிலையில்தான் முதலமைச்சர் அண்மையில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபை முன்வைத்திருந்தார் அத்தோடு தொடர்ந்தும் உறுதியாக குரல் கொடுத்து வந்த முதல்வர் கூட்டமைப்பை விட ஒரு படி மேலே போய் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் தன்னால் திரட்டப்பட்ட 4000 இற்கு மேற்பட்ட காணாமல் போனோரின் முறைப்பாடுகளை சாட்சியங்களுடன் சமர்ப்பித்திருந்தார். இது சுமந்திரன் தரப்பிற்கு கடும் கோபத்தை உண்டு பண்ணிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசைப் பற்றி நற்சான்றிதழை சம்பந்தன் தரப்பு ஐ.நா ஆணையாளருக்கு கொடுக்கும் போது வடக்கு முதல்வர் விடாப்பிடியாக இருப்பது அவர்களை சினங் கொள்ள வைத்திருக்கிறது.
சுமந்திரனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்க முற்பட்ட உறுப்பினர்கள், ஏற்கனவே சம்பந்தனின் பிறந்தநாள் அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை சேர்ந்த சிவமோகனை தமிழரசுக்கட்சிக்கு உள்வாங்கிய நிலையில் சுமந்திரனின் பிறந்தநாளில் முதலமைச்சரை நெருங்க முடியாத நிலையில் அடுத்த எதிரியாக தமிழரசுக் கட்சியால் நோக்கப்பட்ட ஐங்கரநேசனை அமைச்சிலிருந்து பதவி விலக்கி முதலமைச்சரை தனிமைப்படுத்தி சுமந்திரனுக்கான பரிசை வழங்கும் திட்டத்துடன் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதன் முதற்கட்டமாக கடந்த 8.02.2016 அன்று தனியார் விடுதியொன்றில் கலந்துரையாடிய சுமந்திரன் தரப்பு ஏற்கனவே தமது தரப்பான ஆனோல்ட், சயந்தனின் நடவடிக்கைகள் வெற்றியளிக்காத நிலையில் புதிதாக ஒருவரை களமிறக்குவதாக அதற்கு புளொட்டினைச் சேர்ந்த ஏற்கனவே தான் குண்டகசாலையில் டிப்புளோமா கற்றதாக சொல்லி வரும் லிங்கநாதனை அணுகி அடுத்த விவசாய அமைச்சு தருவதாக உறுதியளிக்கப்பட்டு வரைபு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. முதல் நாள் இரவே முதலமைச்சரின் காதுக்கு எட்டிவிட்டதாக முதலமைச்சு வட்டாரங்களிலிருந்து அறிய வருகின்றது.
இது தொடர்பில் சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அதே நாளில் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான தீர்மானத்தடன் அது நின்று போனதாக தெரியவருகிறது. புளொட் மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதனுக்கு விவசாய அமைச்சு வழங்குவதாக சுமந்திரனால் வாக்குறுதி வழங்கப்பட்டதே அவர் தீர்மானத்தை முன்மொழியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்துக்கு முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்து சேகரிக்கப்பட்ட கையெழுத்து வேட்டையில் ஐங்கரநேசன் கையெழுத்திடாமை, சுமந்திரன் பொப்பிமலர் அணிந்து கொழும்பு அரசுடன் இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்திய வேளை ஐங்கரநேசன் கார்த்திகைப் பூ அணிந்து மாகாண அமைச்சர்,உறுப்பினர்களுடன் கிட்டு பூங்காவில் நிகழ்வில் பங்கேற்றமை உட்பட்ட காரணங்களே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவ்க்கினறன.
இந்த கார்த்திகை மலர் சூட்டி நடைபெற்ற மலர்க்கண்காட்சி நிகழ்விற்கு சுமந்திரன் தரப்பு மாகாணசபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே எந்த அமைச்சரோ உறுப்பினரோ மோசடியில் ஈடுபட்டதாகவோ அல்லது வேறு தவறுகள் இருந்தால் அதனை தகுந்த ஆதாரத்தோடு சபையில் சமர்ப்பித்தோ அல்லது ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொண்டுவந்தோ இருக்கலாம் ஆனால் இன்றைய அமர்வில் அவைத் தலைவருடன் முதலமைச்சர் முரண்படும் வகையில் நிகழ்வு மோசமடைந்திருப்பது கவலை தருவதாக இருப்பதாக நோக்கர்கள் கருதுகின்றனர்.