30 வருட ஆயுதப் போராட்டத்திற்கு 83ஆம் ஆண்டு படுகொலைகளும், வன்முறைகளுமே காரணம்!
1983ஆம் ஆண்டு படுகொலைகளும், வன்முறைகளுமே, தொடர்ச்சியாக தமிழ் இளைஞர்கள் 30 வருடங்கள் ஆயுதம் ஏந்த வழிவகுத்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். அரசியலமைப்புத் தீர்வு திட்டம் குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வடமாகாண சபையில் வரைபினை முன்மொழிந்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழர்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் மற்றும் எதிர்பார்ப்புக்களையும், அபிலாசைகளையும் கருத்தில் கொள்ளாத பெரும்பான்மை சமூகத்தின் மேலாதிக்க நடத்தைக்கு எதிரான இளைஞர்களின் இயல்பான பதிலாக ஆயுதம் ஏந்திய புரட்சி ஆரம்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டடினார். 1979ம் ஆண்டு பயங்கரவாத (தற்காலிக) தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. என தேசிய இனப்பிரச்சினையின் கடந்தகால வரலாற்றையும் சுட்டிக்காட்டினார்.
Add Comments