67 அடி புத்தர் சிலை விவகாரம்; தமிழர்கள் மீதான யுத்த சீண்டலே! (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்)


அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாக உள்ள நயினாதீவில் அமைக்கப்படவுள்ள அறுபத்து ஏழு அடி புத்தர் சிலை தமிழர்களை வலிந்து யுத்தத்திற்கு இழுக்கும் செயலாகவே அமையும், இது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிமாகவே உள்ளது. மகிந்த இராணுவத்தால் செய்ததை மைத்திரியும் ரணிலும் சமாதானம் பேசிக்கொண்டு செய்கின்றனர் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்;,
வடக்கு கிழக்கில் இன்று ஒரு புதிய கலாசாரம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எந்தவொரு சிங்களவரும் வாழாத தமிழர் வாழும் இடங்களில் புத்தர் சிலைகளை, விகாரைகளை அமைத்து. இது பெரிய வடிவமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த ஆலயம் என் னத்துக்காக கட்டப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது.

கொக்குளாய் கர்நாட்டுகேணியில் தமிழர்களுடைய காணிகளை அடாத்தாக பிடித்து பிக்கு ஒருவர் தான் நினைத்தபடி புத்த கோவில் ஒன்றினை எத்தனையோ எதிர்ப்புக்களுக்கும் மத்தியிலும் அமைத்து வருகின்றார். இதனை வடக்கு மாகாண ஆளுநரால் கூட தடுக்க முடியாமல் உள்ளது.

இந்த நிலையில் கூட யாழ்ப்பாணத்தில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாக உள்ள நயினை நாகபூசணி ஆலயத்திற்கு முன்பாக அறுபத்து ஏழு அடி உயரமுடைய புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதற்கு வடக்கு மாகாண ஆளுநரும் ஆதரவாக உள்ளார்.
ஆளுநர் இதற்கு ஆதரவாக செயற்படுகின்றார் என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் மோசமான அதிர்ச்சிகர மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் நல்லெண்ணம் பற்றி சிந்திக்கிறார்கள், தீர்வு பற்றி சிந்திக்கிறார்கள், சொந்த இடங்களுக்கு அவர்களால் போகமுடியவில்லை, இங்கே அவர்களது வாழ்விடங்கள் விடுவிக்கப்பட்டவில்லை.

அரசியல் கைதிகள் சிறையில் செத்து கொண்டிருக்கிறார்கள். காணமல்போனவ ர்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை, தமிழ் மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை தீர்க்க ப்படவில்லை. இதற்கெல்லாம் பலகோடி ரூபாய் தேவைப்படும் போது பத்துக்கோடி ரூபாய் செலவில் அறுபத்து ஏழு அடி உயரமான புத்தர் சிலையை வலுக்கட்டாயமாக ஒரு சிங்கவர்கள் கூட வாழாத நயினாதீவில் அமைக்க வேண்டும் என அரசு முனைவது தமிழர்களை சீண்டி வலிந்து ஒரு யுத்தத்துக்கு அழைப்பதற்கு ஒப்பானதாகும்.

இது அப்பட்டமான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையும் சிங்கள மயமாக்கலும் என்பதை யாரும் மறுக்க முடியாது. கிளிநொச்சி வைத்தியசாலையிலும் ஒரு புத்தர் சிலை அமைப்பதற்கு முயல்வதாக அறிய முடிகின்றது. வடக்கில் உள்ள பல திணைக்களத்தின் தலைமை அதிகாரிகள் பலரும் சிங்கள இனத்தை சேர்ந்தவர்காளாகவே உள்ளனர். இவைகள் அனைத்துமே கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையாகவே உள்ளது. 

இது அபாயகரமான நிலையாகும். இது எமது மக்களை அழிக்ககூடிய மறைமுக யுக்தியுமாகும். இதனால் மகிந்த அரசு இராணுவத்தால் மேற்கொண்ட அழிப்பு நடவடிக்கைகளை சமாதானம் பேசிக்கொண்டு மைத் திரியும் ரணிலும் செய்கின்றார்களா என சந்தேகம் ஏற்படுவதாக சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila