சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பதற்கு தென்னிலங்கை மீனவர்களை அனுமதிக்குமாறு முல்லைத்தீவு மீனவர்களிற்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளிற்கு முல்லைதீவு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவு மீனவசங்கத்தின் பிரதிநிதியொருவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் இந்த மிரட்டலை விடுத்துள்ளனர்.


