கடந்த கால ஆட்சியின் போது கடற்படையினரால் 7 மாணவர்கள் கொல்லப்பட்டமை, 28 பேர்கடத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை வெளியிட்ட கடற்படையின் லெப்டினட் கொமாண்டோ வெலகெதரவுக்கு இராணுவ நீதிமன்றால் 4 வருடங்கள் சிறைத்தண்டனைவழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டணைக்கான காரணம் கடற்படையினருக்கு அறிவிக்காமல் அவர் வெளிநாடுசென்றுவந்தமை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு 7மாணவர்களை கொன்று 28 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரிஅவர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் குறித்த கடற்படை கொமாண்டோ உண்மையான குற்றவாளி யார் எனஇனங்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் மீதான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டசந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சட்டத்தரணி ஒருவரே பிரதிவாதிகள்தரப்பில் ஆஜராகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கடற்படை கொமாண்டோ ஒரேஒரு தடவை மாத்திரம் கடற்படைக்குதெரியாமல் வெளிநாடு போய் வந்ததனை காரணம் காட்டி அவருக்கு இராணுவ நீதிமன்றால் 4வருட சிறைத் தண்டணை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதே கடற்படை வீரரானமஹிந்தவின் புதல்வர் யோசித்த 29 தடவைகள் யாரின் அனுமதியின்றி வெளிநாடு போய்வந்துள்ளதாகவும் அவருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாமல் அவர் சுதந்திரமாகவெளியில் சுற்றித் திரிவதாகவும் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தவறு செய்தவர்களுக்கு தண்டனை என்னவோ நிச்சயம் தான். ஆனால் அதிக தவறுசெய்தவர் வெளியே சுதந்திரமாக நடமாடும் போது சிறிய தவறொன்றை செய்த நபருக்குமிகப்பெரிய தண்டனை வழங்குவது எவ்விதம் நியாயமாகும் என கேள்விஎழுப்பப்பட்டுள்ளது.


