இராணுவத்தினருக்கு பண்ணையமைக்க முல்லைத்தீவில் 524 ஏக்கர் காணி வழங்குமாறு கோரிக்கை!

இராணுவத்தினருக்கு பண்ணையமைக்க முல்லைத்தீவில் 524 ஏக்கர் காணி வழங்குமாறு கோரிக்கை!
இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு பண்ணையமைக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் 524 ஏக்கர் அரச காணியை வழங்குமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையானது முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்புப் படையினரால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்குப் பின்னர் பொதுமக்களினதும் அரசாங்கத்தினதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது.
இந்நிலையில் சிவில் பாதுகாப்புப் படையினரால் பண்ணை அமைப்பதற்காக, பிரதேச செயலகங்கள் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கையானது தற்போது மாவட்டச் செயலகத்தில் பரிசீலனையில் உள்ளது.
பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவில் அனுமதி பெறப்பட வேண்டிய காணிகளின் விபரம் எனும் தலைப்பில் பாதுகாப்பு படைகளுக்கான பாரதீனப்படுத்துவதற்காக வழங்கப்படவுள்ள காணிகளின் விபரம் எனக் குறிப்பிட்டு பதின்மூன்று இடங்களில் காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விஸ்வமடு கிழக்கில் 65 ஏக்கர் அரச காணியும், விஸ்வமடு மேற்கில் 25 ஏக்கர் அரச காணியும், வேணாவில் 215 ஏக்கர் அரச காணியும், புதுக்குடியிருப்பு மேற்கில் 15 ஏக்கர் அரச காணியும், உடயார்கட்டு வடக்கில் 9 ஏக்கர் அரச காணியும், சுதந்திரபுரத்தில் 8 ஏக்கர் அரச காணியும், உடையார் கட்டு தெற்கில் 75 ஏக்கர் அரச காணியும், உடையார் கட்டு தெற்கில் 10 ஏக்கர் அரச காணியும், தேவிபுரத்தில் 100 ஏக்கர் அரச காணியும், தேராவிலில் 5 ஏக்கர் அரச காணியும், வள்ளிபுனத்தில் 2 ஏக்கர் அரச காணியும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உடையார் கட்டு வடக்கில் 2 ஏக்கர் அரசகாணியும், உடையார் கட்டு தெற்கில் 4 ஒன்றேகால் ஏக்கர் அரச காணியும் கல்வி நிலையம் அமைப்பதற்காக கோரப்பட்டுள்ளது.download
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila