நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆளுநர் ஒருவரை வடமாகாணத்துக்கு நியமிக்குமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பாக மக்களின் கருத்தறியும் முத்தெட்டுவே செயலணியின் கருத்தமர்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த அமர்வில் போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து வருவதோடு, சர்வதேச விசாரணையைக் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள், வடக்கில் ஒரு கருத்தினையும் தெற்கில் ஒரு கருத்தினையும் வெளியிடும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை மாற்றி வேறொருவரை நியமிக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றித் தவறாகக் கூறுபவர்கள் அனைவரும் தலைவர் பிரபாகரனிடமிருந்து நன்மைகளைப் பெற்றவர்களே என மனோரி செல்லத்துரை என்பவர் தெரிவித்துள்ளார்.