விச ஊசியில் வி­மப் பேச்சு போராளிகளின் மரணத்தில் சிவமோகன் எம்.பி குதர்க்கம்


முன்னாள் பேராளிகளின் மர்மமான உயிரிழப்புகளுக்கு வி­ச ஊசி ஏற்றப்பட்டிருப்பது காரணம் என வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் வயிற்று வலி, வாந்திபேதிக்கும் ஊசி ஏற்றப்படும் என குதர்க்கமாக பேசியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் குழுநிலைக்கூட்டம் நேற்று பி.ப.2.30 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றிருந்தது.
த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் போராளிகளின் மர்மமான உயிரிழப்புக்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன்போதே சிவமோகன் எம்.பியினால் மேற்படி கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் போராளிகளின் உயிரிழப்புத் தொடர்பில் வீணான வதந்திகள் பரப்பப்படுகிறது. ஊடகங்களும் இந்த விடயத்தில் பொய்யுரைக்கின்றன.

முன்னாள் போராளிகள் மட் டுமா உயிரிழக்கிறார்கள். சாதாரண பொதுமக்களும்தானே உயிரிழக்கிறார்கள்.
புற்றுநோய் போன்ற கொடிய நோய் பாதிப்புக்கள் முன்னாள் போராளிகளுக்கு மட்டுமா ஏற்படுகிறது?
சாதாரண பொது மக்களும் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் தானே?

உயிரிழக்கின்ற அனைவருக்கும் விச­ ஊசி ஏற்றப்பட்டதா? எனவே இவ்வாறு ஊசி ஏற்றப்பட வாய்ப்பில்லை.  விச ஊசிப் பிரச்சினையை யாரோ பின் நின்று பூதாகரமாக இயக்கி வருகின்றனர்.
சிறைச்சாலையில் முன்னாள் போராளிகள் கைதிகளாக அடைத்து  வைக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்கு பலநோய்த்தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

வாந்திபேதி, வயிற்றுக்குத்து போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும் ஊசி மூலம் மருந்து ஏற்றப்படும் என தனது கருத்தை வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.
இதன்போது இக்கருத்தை இடை மறித்த இரா.சம்பந்தன், முன்னாள் போராளிகளின் உயிரிழப்பை சாதாரண விடயம் எனக்கருதி ஒதுக்கிவிட முடியாது. முன்னாள் போராளிகளை  நாம் மருத்துவ பரிசோதனை  செய்தாக வேண்டும்.

அதில் குறைந்தது ஒருவருக்காவது விச­ ஊசி ஏற்றப்பட்டிருப் பது கண்டறியப்பட்டால் இலங்கை அரசாங்கத்தின் பயங்கரமான போர்க் குற்றம் வெளிக் கொணரப் படும். எனவே இவ்விடயத்தில் முன்னாள் போராளிகளின் விபரங்களை  திரட்டி அவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila