டக்ளஸை முந்தி ஓடிய சுமந்திரன்!

dou
ரணிலை கண்டவுடன் வாலை சுருட்டிக்கொண்ட நாய் போல ஏன் சுமந்திரன் ஓடுகின்றார் என சுரேஸ்பிறேமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா. கொழும்பினில் நடைபெற்ற நிகழ்வொன்றினில் நீண்ட இடைவெளிக்கு அப்பால் அருகருகாக அமர்ந்திருந்தனர் முன்னாள் நண்பர்களான இவர் இருவரும்.
இந்நிகழ்விற்கு ரணில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.அதே போன்று எதிர்கட்சி தலைவரான இரா.சம்பந்தனும் அழைக்கப்பட்டிருந்த போதும் அவர் வருகை தராததுடன் அவர் சார்பினில் சுமந்திரன் பங்கெடுத்திருந்தார்.dou
இந்நிலையினில் முன்னதாக வருகை தந்திருந்த சுரேஸ்பிறேமச்சந்திரன் தொடர்வந்த சுமந்திரனிற்கு வணக்கம் தெரிவித்திருந்தார்.எனினும் பதில் வணக்கமேதும் தெரிவிக்காது கண்டுகொள்ளாது மேடையிலேறி அமர்ந்து கொண்டார் சுமந்திரன்.
இந்நிலையினில் ரணில் நிகழ்விற்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மேடையிலிருந்து பாய்ந்து குதித்து அவரை வரவேற்க ஓடினார் சுமந்திரன்.
அப்போதே வாலை சுருட்டிக்கொண்ட நாய் போல ஏன் சுமந்திரன் ஓடுகின்றார் என சுரேஸ்பிறேமச்சந்திரனிடம் நையாண்டியுடன் கேள்வி எழுப்பியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா.
அதற்கு பதிலளித்த சுரேஸ் நீங்கள் முன்னர் காட்டிய விசுவாசத்தை மிஞ்சிவிட்டார் சுமந்திரன் என்றார் சிரித்துக்கொண்டே.
இதனிடையே மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை போன்று சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 23ஆம் திகதி பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பில் இன்று (சனிக்கிழமை) யாழில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டி சூழல் ஏற்பட்டது.
எனவே மஹிந்தவிற்கு நேர்ந்த கதியை மனதில் கொண்டேனும் இந்த நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஐ.நா.விற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறினால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்” என்றும் குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila