வடக்கில் கப்பம் கோரிய, பெண்களுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை!

தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் கோரியதாகவும், தமிழ் பெண்களிடம் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் தொடர்பாக, பொலிஸ் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி தலையீட்டின் கீழ், வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் இதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் விசேட செய்தியாளர் மாநாடொன்று நடத்தப்பட்டது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு கூறினார்.
இதன்படி கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் -1 ஐச் சேர்ந்த ரொஷான் ராஜபக்ஷ மற்றும் யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சரித் எ.பி ஜயசுந்தர ஆகியோர் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் வர்த்தகர்களை மிரட்டி கப்பம் கோருவதாகவும் தமிழ் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் அண்மையில் ஊடகங்களில் பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே பொலிஸ்மா அதிபர், குற்றச்சாட்டு தொடர்பிலான உண்மை நிலையைக் கண்டறிவதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila