சீன நீர்மூழ்கி இன்னொரு சோதனை – சமகால அரசியல்

chinas-nuclear-submarines1-600

சீன நீர்­மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்பு துறை­மு­கத்­துக்கு வருகை தரு­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறு சீனா விடுத்த வேண்­டு­கோளை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இரண்டு நாள் பய­ண­மாக கடந்த வியா­ழக்­கி­ழமை மாலையில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கிய சற்று நேரத்தில், இந்தச் செய்­தியை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறு­வனம் வெளி­யிட்­டி­ருந்­தது.
இதை­ய­டுத்து, சர்­வ­தேச ஊட­கங்­களில் இதுவே பிர­தான செய்­தி­யாக மாறி­யி­ருந்­தது. இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் இடையில் நடந்து வரு­கின்ற பூகோள அர­சியல் போட்­டியே இந்தப் பர­ப­ரப்­புக்கு முக்­கிய காரணம்.
மே 14ஆம் திக­தியும், மே 15ஆம் திக­தியும் சீன நீர்­மூழ்கி கொழும்பு துறை­மு­கத்தில் தரித்து நிற்­ப­தற்கு அனு­மதி கோரப்­பட்­ட­தா­கவும், ஆனால் அதனை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்து விட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.
பாது­காப்பு அமைச்சின் உயர் அதி ­காரி ஒரு­வரும் அரச அதி­காரி ஒரு­வரும் இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இந்­தி­யாவின் கரி­ச­னை­களை மீறும் வகையில், சீன நீர்­மூழ்­கிகள் கொழும்பில் தரித்துச் செல்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட வாய்ப்­பில்லை என்று அரச அதி­காரி ஒருவர் கூறி­யி­ருந்தார்.
ஏற்­க­னவே, 2014ஆம் ஆண்டு ஒக்­டோபர் மற்றும் நவம்பர் மாதங்­களில் கொழும்பு துறை­மு­கத்­துக்கு சீன நீர்­மூழ்­கிகள் மேற்­கொண்­டி­ருந்த பய­ணமே, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு கடு­மை­யான நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யது. அதன் தொடர்ச்­சி­யா­கவே ஆட்­சி­மாற்­றத்தில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பும் இருந்­தது.
அந்தச் சம்­ப­வத்­துக்குப் பின்னர், சீன நீர்­மூழ்­கிகள் கொழும்பு துறை­மு­கத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை. ஆனால் திடீ­ரென இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் கொழும்புப் பய­ணத்தை அண்­டி­ய­தாக, சீன நீர்­மூழ்கி கொழும்­புக்கு வரு­வ­தற்கு அனு­மதி கோரப்­பட்­டி­ருக்­கி­றது.
2014ஆம் ஆண்டு, சீனா­வுடன் எப்­போதும் முரண்­பட்டு வரும் ஜப்பானிய பிர­தமர் ஷின்சோ அபே கொழும்பு வந்­தி­ருந்த போது தான், சீன நீர்­மூழ்கி கொழும்பு வந்­தி­ருந்­தது. அந்த விவ­காரம் அப்­போது தீவி­ர­ம­டைந்­த­மைக்கு அதுவும் ஒரு காரணம்.
அது­போ­லவே, இந்­தியப் பிர­த­மரின் வரு­கையை ஒட்­டி­ய­தாக இப்­போது சீன நீர்­மூழ்­கியின் பயணத் திட்டம் வகுக்­கப்­பட்­டதும் கூட கூடுதல் சர்ச்­சை­க­ளுக்குக் காரணம் எனலாம்.
ஏனென்றால், இந்­தியப் பிர­தமர் இலங்­கையில் மேற்­கொண்­டது ஒன்றும் திடீர் பய­ண­மல்ல. கடந்த ஆண்­டி­லேயே திட்­ட­மி­டப்­பட்­டது. அவ­ரது பயண நாட்கள் பற்­றிய திக­திகள் கூட முன்­னரே தெரிந்த ஒன்று தான்.
இதனை அண்­டி­ய­தாக சீனா தனது நீர்­மூழ்­கியை கொழும்­புக்கு அனுப்பத் திட்­ட­மிட்­டது சந்­தே­கங்­க­ளையே ஏற்­ப­டுத்தும். விநி­யோக உதவித் தேவை­க­ளுக்­காக நீர்­மூழ்­கியை கொழும்­புக்கு அனுப்ப சீனா திட்­ட­மிட்­டி­ருக்­கலாம் என்­பது பொய்­யான வாதம்.
ஏனென்றால், இந்­தியப் பெருங்­கடல் வழி­யாக சீனா தனது நீர்­மூழ்­கி­களை மாதம் தோறும் ஏடன் வளை­கு­டா­வுக்கு அனுப்பி வரு­கி­றது. இலங்­கையைக் கடந்தே இந்த நீர்­மூழ்­கிகள் சென்று வந்­தி­ருக்­கின்­றன. ஆனாலும், ஆட்சி மாற் றம் ஏற்­பட்ட பிறகு, சீனா தனது நீர்­மூழ்­கி­க­ளையோ, கப்­பல்­க­ளையோ கொழும்­புக்கு அனுப்­ப­வில்லை.
இந்­த­நி­லையில் திடீ­ரென இந்­தியப் பிர­த­மரின் பய­ணத்தை ஒட்­டி­ய­தாக சீனா தனது நீர்­மூழ்­கியை அனுப்பும் முயற்­சி­களை எடுத்­துள்­ளது என்றால், அதில் விச­மத்­த­னங்­களும் நிறைந்­தி­ருக்­கி­றது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இலங்­கைக்கு சீனா தனது நீர்­மூழ்­கியை 2014ஆம் ஆண்டு எந்த உள்­நோக்கமும் இன்றி அனுப்­பி­ய­தென்றால், ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் ஏன் அத்­த­கைய முயற்­சி­களை மீண்டும் எடுக்­க­வில்லை என்ற கேள்வி எழு­கி­றது.
அதே­வேளை, சீன நீர்­மூழ்­கிக்கு கொழும்பில் தரித்துச் செல்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்டாம் என்று இலங்கை அர­சாங்­கத்­துக்கு இந்­தியா அழுத்­தங்­களைக் கொடுத்­தி­ருக்­கலாம். அதற்­கான சந்­தர்ப்­பங்­களும், வாய்ப்­பு­களும் அதிகம்.
சீன நீர்­மூழ்­கிகள் இலங்­கையின் துறை­மு­கங்­களை பயன்­ப­டுத்­து­வதை இந்­தியா விரும்­ப­ வில்லை. ஆனால் அதனை வெளிப்
ப­டை­யாகக் கூற முடி­யாத நிலையில் இருக்­கி­றது. சந்­தர்ப்­பங்கள் கிடைக் கும் போது, இது­போன்ற விட­யங்­களை இந்­தியா இரா­ஜ­தந்­திர ரீதி­யாக கையாண்டு வந்­தி­ருக்­கி­றது.
மோடியின் கொழும்பு பய­ணத்தை ஒட்­டி­ய­தாக இல்­லாமல் சீன நீர்­மூழ்­கியின் வரு­கைக்கு அனு­மதி கோரப்­பட்­டி­ருந்தால் இந்­தியா சில வேளை­களில் மௌன­மாக இருந்­தி­ருக்­கலாம்.
2014ஆம் ஆண்டு சீன நீர்­மூழ்­கி­களின் வருகை தொடர்­பாக இந்­தி­யா­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது என்றே சீனாவும், மஹிந்த அர­சாங்­கமும் திட­ மாக வாதிட்­டன. ஆனால் இந்­தி­யாவோ அதனை மறுத்­த­துடன், தன் மீதான அத்­து­மீ­ற­லாக, தனக்கு இழைக்­கப்­பட்ட துரோ­க­மா­கவே பார்த்­தது. மஹிந்த அர­சாங்­கத்­துடன் இருந்த இடை­வெ­ளியால் இந்­தியா அதனை பார­தூ­ர­மா­ன­தாக எடுத்துக் கொண்­டது.
இந்த முறை சீன நீர்­மூழ்­கிக்கு அனு­ மதி மறுக்­கப்­பட்­ட­தாகச் சொல்­லப்­படும் விட­யத்தில், இந்­தி­யாவை விட இலங்­கையே கடு­மை­யான சூழ்­நி­லையை எதிர்­கொண்­டி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.
ஏனென்றால், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா­வுக்கு ஐந்து நாள் பய­ணத்தை ஆரம்­பிக்கும் காலத்­தி­லேயே சீன நீர்­மூழ்­கிக்கு கொழும்பில் தரிக்க அனு­ம­திக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனாவில் தங்­கி­யி­ருக்கும் போது, சீன நீர்­மூழ்கி கொழும்பில் தரித்­தி­ருந்தால், இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் நெருங்­கிய கூட்டு ஏற்­பட்டு விட்­ட­தான தோற்­றப்­பாடு உரு­வாக்­கப்­படும்.
மோடியின் பய­ணத்­திட்­டத்தைக் குழப்­பு­வது அல்­லது அதற்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வது கூட சீனாவின் திட்­ட­மாக இருந்­தி­ருக்­கலாம்.
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா­வுக்குப் பயணம் மேற்­கொள்ளப் போகும் நிலையில் தனது கோரிக்­கையை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரிக்­காது என்ற எதிர்­பார்ப்பும் கூட சீனா­வுக்கு இருந்­தி­ருக்­கலாம்.
ஆனாலும், இந்­தியப் பிர­த­மரின் பய­ணத்தைக் காரணம் காட்டி, இலங்கை அர­சாங்கம் சீனாவின் வேண்­டு­கோளை நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது.
அதே­வேளை, மே 14, 15ஆம் திக­தி­களில் சீன நீர்­மூழ்கி இலங்கை வரு­வ­தற்கு இலங்கை அர­சாங்­கத்­தினால் அனு­மதி மறுக்­கப்­பட்ட போதிலும், அது நிரந்­த­ர­மான முடிவா என்­பதில் கேள்­விகள் உள்­ளன. ரொய்ட்டஸ் செய்தி நிறு­வ­னத்­துக்கு தகவல் வெளி­யிட்ட பாது­காப்பு அமைச்சின் உயர் அதி­காரி ஒரு­வரே, இந்தப் பயணம் பின்னர் ஒரு­வேளை இடம்­பெ­றலாம் என்று கூறி­யி­ருக்­கிறார்.
அது­போல சீன தூத­ரக வட்­டா­ரங்­களும், தமது கோரிக்­கைக்கு இன்­னமும் அர­சாங்­கத்­திடம் இருந்து பதில் வர­வில்லை என்றே கூறி­யுள்­ளன. எனவே, மாற்று திக­தி­களில் சீன நீர்­மூழ்­கியின் கொழும்புப் பயணம் இடம்­பெறக் கூடும்.
இப்­போது இந்­தியப் பிர­த­மரின் வரு­கையைக் காரணம் காட்டி நிரா­க­ரித்­தது போன்று இலங்கை அர­சாங்­கத்­தினால் சீன நீர்­மூழ்­கி­க­ளுக்கு தொடர்ச்­சி­யான அனு­மதி மறுக்க முடி­யாது. அவ்­வாறு செய்­வது சீனா­வுடன் பெரி­ய­ள­வி­லான பொரு­ளா­தார மற்றும் பிற ஒத்­து­ழைப்­புகள், உற­வு­களை வைத்­துள்ள இலங்­கைக்கு பாத­க­மா­கவே அமையும்.
2014ஆம் ஆண்டு சீன நீர்­மூழ்­கி­களின் கொழும்பு வருகை ஆட்சி மாற்­றத்தில் குறிப்­பி­டத்­தக்க கார­ணி­யாக இருந்த நிலையில், தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 2015ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் சிங்­கப்பூர் சென்­றி­ருந்த போது, Straits Times நாளிதழ் ஒரு நேர்­கா­ணலை நடத்­தி­யி­ருந்­தது.
அதில் இந்­தி­யாவை சினம்­கொள்ள செய்த சீன நீர்­மூழ்கி கப்­பல்­களின் பயணம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது.
அதற்கு அவர், “இலங்­கைக்கு வெளி­நாட்டு கடற்­படைக் கப்­பல்கள் வரு­வ­தற்­கான அள­வுகோல் ஒன்றை நாங்கள் வகுத்­துள்ளோம். அத­ன­டிப்­ப­டையில் எந்த நாட்­டி­னதும், நீர்­மூழ்­கிகள் உட்­பட அனைத்து கடற்­படைக் கப்­பல்­களும் இலங்­கைக்கு வரலாம்.
நட்­பு­றவுப் பய­ண­மாக இருந்தால், நாங்கள் அயல்­நாட்­டிற்கு அது குறித்து அறி­விப்போம். குறிப்­பிட்ட கப்­பல்கள் இலங்­கைக்கு தொடர்ச்­சி­யாக, அடிக்­கடி வராத வகையில் அட்­ட­வ­ணை­களை வகுப்போம்.
சீன நீர்­மூழ்­கிகள் இறு­தி­யாக இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்ட வேளை அது குறித்து தனக்கு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என இந்­தியா தெரி­விக்­கி­றது, இதுவே பிரச்­சி­னைக்­கு­ரிய விடயம். இது குறித்து ஆராய்ந்து பார்த்­ததில் இது உண்மை என்றே தெரி­ய­வந்­துள்­ளது.
சீனா தனது நீர்­மூழ்­கி­களின் பய­ணத்தை முன்­கூட்­டியே இலங்­கைக்கு தெரி­வித்­துள்­ளது. அவர்­க­ளது நீர்­மூழ்­கிகள் கொழும்புத் துறை­மு­கத்­திற்கு வந்து தரித்து விட்டு சென்று விட்­டன.
ஜப்­பா­னியப் பிர­தமர் பயணம் மேற்­கொண்ட வேளை இந்த சம்­பவம் இடம்­பெற்­றது. எனவே அது பிரச்­சி­னை­யாக மாறி­யது.
தற்­போது நாங்கள் எங்கள் அள­வு­கோல்­களின் அடிப்­ப­டையில் செயற்­ப­டுவோம். நீங்கள் உங்கள் நீர்­மூழ்­கி­க­ளையும் போர்க்­கப்­பல்­க­ளையும் இலங்­கைக்கு அனுப்ப வேண்டும், சிங்­கப்­பூ­ரிடம் சிறந்த போர்க்­கப்­பல்கள் உள்­ளன.” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.
அதா­வது சீன நீர்­மூழ்­கிகள் மீண்டும் இலங்கை வரு­வ­தற்கு எந்த தடை­களும் இல்லை. இந்­தி­யா­வுக்குத் தெரி­யப்­ப­டுத்தி விட்டு வரலாம், ஆனால் அடிக்­கடி வரக் கூடாது என்ற தொனியில் அவ­ரது அந்தக் கருத்து அமைந்­தி­ருந்­தது.
ஆனால், அந்தக் கருத்­துக்கு மாறான வகையில், சீன நீர்­மூழ்­கிக்­கான பய­ணத்­துக்கு இலங்கை அர­சாங்கம் அனுமதி மறுத்திருக்கிறது. கொள்கை அளவிலான நிரந்தர முடிவாக இது இருக்குமேயானால், அது இலங்கை- சீன உறவுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
எனவே தான் வேறொரு நாளில் சீன நீர்மூழ்கிக்கு அனுமதி கொடுக்க அரசாங்கம் திட்டமிடலாம். ஆனால் அதனை இந்தியா எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்பது முக்கியமான கேள்வி.
இலங்கையில் சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் எரிச்சலுடன் பார்க்கும் இந்தியாவுக்கு சீன நீர்மூழ்கிகள் மீண்டும் கொழும்பு வருவது ஒருபோதும் இனிப்பான செய்தியாக இருக்க முடியாது.
அதேவேளை, தனது பொருளாதார அபிவிருத்திக்காக சீனாவின் மீது தங்கியிருக்க வேண்டிய நிலையில் உள்ள இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவின் எல்லாக் கோரிக்கைகளையும் உதாசீனம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அந்தக் கூட்டு பலவீனப்பட்டு விடும்.
இந்த நிலையில் மஹிந்த அரசாங்கத்துக்கு சீன நீர்மூழ்கிகள் எவ்வாறு தலைவலியான விடயமாக மாறியதோ, தற்போதைய அரசுக்கும் அதுவே பெருந்தொல்லையாக மாறியிருக்கிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila