இன்று முற்பகல் பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்வு இலங்கையில் நடைபெறுவது பௌத்த தத்துவத்தின் உன்னத செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் நோக்கிலேயாகும் என்று ஜனாதிபதி கூறினார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எமது படையினர் மேற்கொண்ட பணிகளை இந்நாட்டு மக்கள் ஒருபோதும் மறந்துவிட முடியாது எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது வழங்கப்படும் சலுகைகளை மேலும் அதிகரித்து அவர்களது நலன்பேணலுக்காக மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இராணுவத்தின் நலன்பேணலுக்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். |
அரசியலமைப்பில் பௌத்தத்துக்கே முன்னுரிமை! - ஜனாதிபதி
Add Comments